மார்பில் பால் குடித்த குழந்தை மூச்சுத் திணறி மரணம் !

0
தாயின் மார்பில் பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த தம்பதி சத்யராஜ் - செலஸ்டின் தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். 

முதல் குழந்தைக்கு ஒன்றரை வயதாகிறது. இரண்டாவது குழந்தை பிறந்து 18 நாள்தான் ஆகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செலஸ்டின் தனது குழந்தைக்கு பாலூட்டினார். 


பிறகு தூங்க வைக்கலாம் என்று செலஸ்டின் தூக்கியபோது, குழந்தை மயங்கி சரிந்தபடியே இருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். 

ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்னவே இறந்து விட்டதாக கூறினர். 

தாயிடம் பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் தான் குழந்தை இறந்ததற்கு காரணம் என்றும் தெரிவித்தனர். 

இது குறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில சமயங்களில் குழந்தைகள் தாயிடம் பால் குடிக்கும்போது புரையேறி விடுவதும் உண்டு. 

அப்போது குழந்தை களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். 


எனவே இந்த குழந்தைக்கும் பால் புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக் கலாம் என்று கூறப் படுகிறது. 

பிறந்து 18 நாளே ஆன குழந்தை இப்படி அநியாயமாக உயிரிழந்தது நினைத்து காசிமேடு மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings