உத்தர பிரதேசத்தில் ராமருக்கு பிரம்மாண்ட உயரத்தில் சிலை !

0
உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 


இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி உலாவந்து கொண்டிருந்தது. 

இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் (தகவல்) அவானிஷ் அவாஸ்தி இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். 

‘ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். 

இதில் அவரது உருவம் 151 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீட்டரிலும், பீடம் 50 மீட்டரிலும் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பீடம் பகுதியில் மியூசியம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், 

‘இந்த வேலையை தொடங்கு வதற்காக ஐந்து நிறுவனங் களை தேர்வு செய்து முதல்வரிடம் தெரிவிக் கப்படும். 

அத்துடன் மணல் உறுதி சோதனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.


குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை மோடி திறந்து வைத்தார். 

இந்த சிலையை விட உயரமான சட்டசபை கட்ட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings