சவுதி இளவரசர் சல்மானின் ராஜ்யத்துக்கு விழுந்த முதல் அடி !

0
பத்திரிகை யாளர் ஜமால் கஷோகிஜி படுகொலை சம்பவம் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ராஜ்யத்துக்கு விழுந்த முதல் அடி. 
ஓராண்டாகப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை களை மேற்கொண்டு சல்மான் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயர், 

இந்த ஒரு சம்பவத்தால் மொத்தமாகச் சிதைந்து விட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


சவுதியின் `தனி ஒருவன்’...

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சவுதியின் துணை பிரதம மந்திரியாக முகமது சல்மான் பதவி யேற்றார். 

பொருளாதார மற்றும் மேம்பாட்டு அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என முக்கிய பதவிகள் அவருக்கு வழங்கப் பட்டன. 

சவுதி அரசரும் முகமது பின் சல்மானின் தந்தையு மான சல்மான் வயது மூப்பின் காரணமாக அல்சைமர் நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார். 

எனவே, அவர் வகித்து வந்த அத்தனை பொறுப்பு களையும் இளவரசர் முகமது சம்லான் ஏற்றுக்கொண்டார். 
மொத்தத்தில் அவர் ஆக்டிங் அரசராகவே செயல்பட தொடங்கினார். 

இது சல்மான் குடும்பத்துக் குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தியது. 

இளவரசர் சல்மானுக்கு குடும்பத்து க்குள் எதிரிகள் இருந்தனர். அவர்களிடம் ஜமால் கஷோகிஜி நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் இளவரசர் சல்மானின் ஆதரவாளர்கள் கஷோகிஜிக்கு பலமுறை மிரட்டல் விடுத்துள்ளனர். 


ஒரு கட்டத்தில் அவர் அமெரிக்காவு க்கு குடிபெயர்ந்தார். 

சில மாதங்களில் சவுதியை சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பலால் துருக்கியில் கொல்லப் பட்டார். 

ஜமாலின் உடலைக் கூட இன்று வரை துருக்கி அரசால் கண்டுப் பிடிக்க முடிய வில்லை. 

இது வேறு டிபார்ட்மென்ட். இளவரசர் சல்மானின் பாசிடிவ் பக்கங்களுக்கு வருவோம்.

பெண்கள் வளர்ச்சிக்கு பச்சைக் கொடி...

இளவரசர் சல்மான் பதவியேற்றதும் உலகமே மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 

முக்கியமாகப் பெண்களின் வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்தினர். 

ஆண்டாண்டுக் காலமாக அரேபிய நாடுகளில் பெண்களுக் கான உரிமைகளும் சுதந்திரமும் முழுமையாக வழங்கப் படுவதில்லை என 

பிற நாடுகள் குற்றம் சுமத்துவது வழக்கம். அந்தக் கூற்றை சல்மான் பொய்யாக்கினார். 

சவுதி பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கும் சட்டத்தை அமல் படுத்தினார். 
சவுதி பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என அறிவித்தார். 

அது மட்டுமில்லை, பொது இடங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பெண் பாடகர்கள் பாடலாம், 

பெண்களுக் காகத் தனி விளையாட்டு அரங்கு என அதகளப்படுத்தினார் இளவரசர் சல்மான். 


சவுதியில் சமூக மாற்றங் களுக்கு அடித்தளம் போட்டதும் பொருளாதார தாராள மயமாக்கலுக்கு 

வித்திட்டதும் சர்வதேச அரங்கில் அவருக்குப் பாராட்டு களைப் பெற்றுத் தந்தன.

அரங்கேறிய மனித உரிமை மீறல்கள்...

என்னதான் இளவரசர் சீர்திருத்தங் களைக் கொண்டு வந்திருந்தாலும் அவரின் நெகடிவ் பக்கங்களால் 

உலகின் அனைத்துத் திசைகளில் இருந்தும் விமர்சனங்களைச் சந்தித்தார். 

சமூக ஆர்வலர்களைச் சிறையில் அடைத்தது, பொது மக்களையும் குழந்தை களையும் பலி கொண்ட 

ஏமன் போரில் முக்கிய பங்கு வகித்தது, கத்தார் விவகாரத்தில் தலை யிட்டது, லீபனேனுட னான சண்டை, 

ஜமால் கஷோகிஜி படுகொலை உள்ளிட்ட விவகாரங் களால் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகளுக்கு இளவரசர் சல்மான் ஆளானார். 

முக்கியமாக, ஜமால் கஷோகிஜி சித்ரவதை செய்து படுகொலை செய்யப் பட்டதற்கு 

ஐ.நா-வில் பெரும் எதிர்ப்புக் குரல்களை சம்பாதித்துக் கொண்டார் இளவரசர் சல்மான். 
இது போதாதென்று சவுதி அரசின் மீது மிகப்பெரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஒன்றை 

அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) நிறுவனமும் யூமன் ரைட்ஸ் வாட்ச் ( Human Rights Watch) நிறுவனமும் முன் வைத்துள்ளன.

அரசை எதிர்த்தால் கரன்ட் ஷாக்...


கடந்த ஆண்டு பெண் உரிமைகளுக் காகப் போராடும் பெண் சமூக செயற் பாட்டாளர்கள் 8 பேர் சவுதியின் தஹ்பன் சிறையில் அடைக்கப்பட்டு 

சிறை அதிகாரி களால் சித்ரவதை செய்யப் பட்டதாக The Wall Street Journal திடுக்கிடும் செய்தி ஒன்றை வெளியிட்டது. 

இதைத் தொடர்ந்து அந்த செய்தியை உறுதிப் படுத்தும் விதமாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் 

மற்றும் யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்புகள் மூன்று பேரின் வாக்குமூலங்களை வெளியிட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிளப்பியது.

சவுதி அரசால் சிறையில் அடைக்கப்பட்டு கடுமையான சித்ரவதை களுக்கு ஆளானதாகப் சமூக செயற்பாட்டா ளர்கள் அந்த வாக்கு மூலத்தில் குறிப் பிட்டுள்ளனர். 

சிறை அதிகாரிகள் அவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சி கொடுமை செய்துள்ளனர். 

கசையடிகள் கொடுத்து தூங்க விடாமல் செய்துள்ளனர். பெண் செயற்பாட்டா ளருக்கு பாலியல் தொந்தரவும் கொடுக்கப் பட்டுள்ளது. 

தனிச்சிறையில் அடைத்து மனரீதியாக அவர்களைப் பாதிக்க வைத்து தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும் அளவுக்குச் சித்ரவதை செய்துள்ளனர். 

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பிடம் வாக்கு மூலம் கொடுத்தவர்கள், தங்கள் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களையும் காண்பித் துள்ளனர்.

சவுதியை எச்சரிக்கும் மனித உரிமை அமைப்புகள்

சவுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் மத்திய கிழக்கு நாடுகளின் இயக்குநர் மைகில் பேஜ் பேசுகையில், 

`பெண்களின் உரிமைகளுக் காகப் போராடும் சமூக செயற் பாட்டாளர்களை சித்ரவதை செய்யும் எந்த நாட்டின் அரசும் கடுமையான விளைவு களைச் சந்திக்கும். 


அமெரிக்காவின் ஆதரவு பெற்ற நாடாக இருந்தாலும் விளைவுகள் கடுமையாகத் தான் இருக்கும்’ என்று எச்சரித்துள்ளார்.

`சவுதியில் காலங்கால மாகப் பின்பற்றப்பட்டு வந்த பழைய சம்பிரதாயங் களைத் தகர்த்து 

பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட இளவரசர் சல்மான் சீர்திருத்தங்கள் மேற்கொண்டி ருந்தாலும், 
அரசு மீதான விமர்சனங் களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் அவருக்கு வரவில்லை’ என்கின்றனர் சவுதி பத்திரிகை யாளர்கள்.

அரசை விமர்சித்து, சின்னச் சின்ன விஷயங்களுக்காகப் போராட்டம் நடத்து பவர்களைச் சவுதி அரசு கடுமையாகத் தண்டிக்கிறதாம். 

கடந்த ஆகஸ்ட் மாதம் அரசியல் காரணங்களுக் காகப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 சமூக செயற் பாட்டாளர் களைச் 

சிறையில் அடைத்து மரண தண்டனை வழங்கி யுள்ளது சவுதி அரசு. கைது செய்யப்பட்டவர்களில் இஸ்ரா என்னும் பெண் போராளியும் அடக்கம். 

சவுதி வரலாற்றில் மரண தண்டனை பெறும் முதல் பெண் செயற் பாட்டாளர் இஸ்ரா தான். 

`இஸ்ரா அரசியல் பின்புலம் உள்ளவர் என்றாலும் அவரின் போராட்டம் அமைதியான முறை யிலேயே இருந்தது. 

எனவே, அவருக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது’ என்கிறது யூமன் ரைட்ஸ் வாட்ச்.


அமெரிக்காவின் ஃபுல் சப்போர்ட்

இந்த சம்பவங்களி லிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. சவுதியில் போராளியாக இருப்பது மிகவும் கடினம். 

இது ஒருபுறம் இருக்க சவுதியின் மனித உரிமை மீறல் புகார்களுக்கு 

அமெரிக்கா கள்ள மௌனம் காப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

ஜமால் விவகாரத்திலும் ட்ரம்ப் சவுதி அரசுக்கு ஆதரவாகவே செயல்படுவ தாக சர்வதேச பத்திரிகையாளர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. 

சவுதியை விட பல மடங்கு அமெரிக்கா ஆபத்தான நாடு என்று அவர்கள் கருதுகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings