முதல் நாளே 40,000 வாடிக்கையாளர்கள் `ஐக்கியா’-வில்?

0
ஹைதராபாத் நகரமே மிரண்டு போகிற அளவுக்கு, இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காரிலும் பைக்கிலும் 
முதல் நாளே 40,000 வாடிக்கையாளர்கள் `ஐக்கியா’



காத்திருக்கும் பொது மக்கள் கூட்டம், அனைவரை யும் வியப்புக் குள்ளாக்கியது. இது ஏதோ கோயில் திருவிழாவுக்கோ, போராட்ட நிகழ்வுக்கோ சேர்ந்த கூட்டமல்ல. 

மக்களின் இந்த நெடுநேரக் காத்திருப்பு க்குக் காரணம், ஒரு கடை திறப்பு. ஆம், `ஃபர்னிச்சர்' உலகின் டான் ஆன `ஐக்கியா' நிறுவனம், இந்தியாவில் தன் தடத்தைப் பதித்துள்ளது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டுள்ள இந்தக் கடைக்கு, இந்தியா முழுவதிலு மிருந்து மக்களின் வருகை அதிகரித்துள்ளது. 

இந்தக் கடையில் அப்படி என்ன ஸ்பெஷல்!

1943-ம் ஆண்டு, சுவீடனைச் சேர்ந்த இங்வர் கெம்ப்ராட் என்பவரால் `mail-order' விற்பனைக் காகத் தொடங்கப் பட்ட நிறுவனம் `ஐக்கியா'. அதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுக்குப் பிறகு ஃபர்னிச்சர் களை விற்க ஆரம்பித்து, 
தற்போது உலகளவில் தனக்கான அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக் கிறது. 49 நாடுகளில், மொத்தம் 403 ஸ்டோர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், ஆண்டு தோறும் 47 பில்லியன் டாலர் டர்ன்ஓவர் செய்கிறது.



2006-ம் ஆண்டு இந்தியாவில் நிறுவ இருந்த ஐக்கியா, FDI விதிமுறைக்குட் பட்டு 12 ஆண்டுக்குப் பிறகு 2018-ம் ஆண்டில் தொடங்கப் பட்டிருக்கிறது. சுமார் 10,000 கோடி முதலீட்டில், உள்நாட்டு விற்பனை யாளர்களோடு இணைந்து இந்த நிறுவனம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தொடங்கப் பட்டிருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில், ஐக்கியா அணி இந்தியா முழுவதும் சென்று சர்வே ஒன்று நடத்தியது. அதில், ஃபர்னிச்சர் தொடர்பான இந்திய மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங் களைக் கேட்டு தெரிந்து கொண்டது. 

அதற்கேற்றபடி, பொருள்களைத் தயார் செய்தனர். அத்தனை வேலைப் பாடுகளும் முடிந்து, கடைத் திறப்பு நாளன்று 40,000 மக்கள் தங்களின் கடைக்கு வருகைத் தந்திருப்பதைப் பார்த்து, ஐக்கியா நிறுவனமே வியந்தது.

4 லட்சம் சதுரடிக் கட்டடம், 7500 பொருள்கள், 950 நேரடி ஊழியர்கள், 1500 மறைமுக ஊழியர்கள் என பிரமாண்டங்கள் நிறைந்த இந்த ஸ்டோரின் முதல் நாள் விற்பனை, 6 கோடியைத் தொட்டது! 

இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 60 லட்சம் வாடிக்கை யாளர்களை எதிர்பார்க்கும் ஐக்கியா நிறுவனம், இன்று வரை தினமும் சராசரி 28,000 வாடிக்கையாளர்களைக் கண்டுள்ளது. 

சுமார் ஆயிரம் பொருள்கள், இருநூறு ரூபாய்க்கும் குறைவு. லிவ்விங், டைனிங், பால்கனி, பாத்ரூம், சமையலறை, படுக்கையறை என ஒவ்வொன்று க்கும் தனித்தனி அறையில் பொருள்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. 

விருப்பமான பொருள்களை மிகவும் குறைந்த விலையில் தனித்தனியே வாங்கி, அதை நம் விருப்பத்துகேற்பப் பொருத்தியும் கொடுக்கிறார்கள்.

இது மட்டுமல்ல, இங்கே மற்றொரு சிறப்பம்ச மாக, 25 விற்பனையாளர் களோடு ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாபெரும் உணவகமும் உள்ளது. அட்டகாச மான ஃபர்னிச்சர்களோடு சுவையான உணவு வகைகளும் இங்கு கிடைக்கும். 

மற்ற ஐக்கியா ஸ்டோர்களில் போர்க் மற்றும் பீஃப் உணவு வகைகளே சிறந்த உணவாகக் கருதப் படுகிறது. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான உணவு வகைகள் சைவம் தான். அசைவத்தில் சிக்கன் அயிட்டம் மட்டும் உள்ளது. மற்ற பொருள்களைப் போலவே உணவு விலைகளும் மிகவும் குறைவு.

இத்தனை சலுகைகள் கொண்ட ஸ்டோர் என்றதும், பொது மக்கள் கடலெனத் திரண்டுள்ளனர். 



கூட்ட நெரிசலையும், சீரற்றப் போக்குவரத்து நிலையையும் கண்ட நிறுவனம், ``உங்களின் உற்சாகம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. 
எங்களின் ஸ்டோர் மற்றும் வாகன நிறுத்த இடங்களும் முற்றிலும் நிரம்பி யுள்ளன. ஆனால், நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. இதே குறைந்த விலையில் எங்களின் ஸ்டோர் 365 நாளும் செயல்படும். 

அதனால் பொறுமையாய் வாருங்கள்" என்று பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் வெள்ளத்தைக் கண்டு எதையும் எளிதில் தீர்மானிக்க முடியாது என்ற பதற்றமும் அவர்களிடம் உள்ளது. 

ஏனென்றால், சீனாவில் உள்ள பீஜிங் ஐக்கியா ஸ்டோர் திறப்பின் போதும் இதே போல் கூட்டம் சேர்ந்தது. ஆனால், அவர்களில் பலர் சோபாவில் உட்கார்ந்து மட்டும் பார்க்கும் `விண்டோ ஷாப்பர் ஸாகத்தான்' இருந்தனர். எதுவாக இருந்தாலும் வெயிட் பண்ணித் தான் பார்க்கணும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)