ஹெர்னியா என்பது என்ன? | What is a Hernia? - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

ஹெர்னியா என்பது என்ன? | What is a Hernia?

Subscribe Via Email

குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பு அல்லது திசுவினால் உருவாக்கப் படும் ஒரு புடைப்பு. புடைப்பானது பொதுவாக அது இருக்கும் உடல் பாகத்தின் பலவீனமான பகுதியி னூடாகத் தள்ளுகிறது. 
மிகவும் பொதுவாக, குடலிறக்கம் ஏற்படும் பகுதி வயிறு ஆகும். குடலின் ஒரு பகுதி அடிவயிற்றுச் சுவரினூடாக தொப்புளினூடாக தள்ளப்படும் போது 


தொப்புள் சார்ந்த குடலிறக்கம் ஏற்படும்.குடலின் பகுதி அடிவயிற்றுச் சுவரினூடாக சுற்றி தள்ளும் போது அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் ஏற்படுகிறது.

தொப்புள் சார்ந்த குடலிறக்கம் பெரும்பாலும் பிறந்த ஒரு சில வாரங்களில் காணப்படும்.

பெரும்பாலும் இது தொப்புள் கொடி விழுந்த பின்னர் சம்பவிக்கும்.

பொதுவாக, இது 2 வயதுக்கு முன்பாக சிகிச்சை செய்யப் படாமலே நிவாரணமாகி விடும்.

அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்,விதைப்பைக்கு மேல் ஒரு மென்மையான வீக்கம் நாளின் பிற்பகுதியில் தோன்றலாம்

அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் பெரும்பாலும் ஆண்களுக்கு பிறந்த சிறிது காலத்திற்குள் இந்தக் கால்வாய் மூடப்பட்டு விடும்.

அது முழுமையாக மூடப்படாவிட்டால், விதைப் பைக்குள் குடலின் ஒரு பகுதி இறங்கக் கூடிய அளவுள்ள துவாரம் ஒன்றை விட்டு விடும். 

இது தோலின் கீழ் ஒரு புடைப்பை உருவாக்கும். இது அடிவயிறு சார்ந்த குடலிறக்கம் எனப்படும்.

குடலின் ஒரு பகுதி அல்லது வேறொரு உறுப்பு அல்லது திசு இந்தத் துவாரத்தில் சிக்கிக் கொண்டால், 
அதனுடைய இரத்த விநியோகம் அடைக்கப் பட்டு விடலாம். இது நசுங்கிய குடலிறக்கம் என அழைக்கப்படும்.

இது சம்பவிக்கும் போது, அந்தப் பகுதி நிறம் மாறுபட்டதாகவும் வலியுள்ள தாகவும் மாறும்.

மருத்துவர் குடலிறக்க த்தைப் பரிசோதித்து அறுவைச் சிகிச்சை தேவையா என்பதை தீர்மானிப்பார்.

குடலிறக்கம் நசுங்கிப் போயிருக்கலாம் என்பதால் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.

அறுவைச் சிகிச்சையின்போது, சிறு குடல், அல்லது வேறு உறுப்பு அல்லது திசு, அதன் சரியான இடத்துக்குத் தள்ளி வைக்கப்படும்.

குடலிறக் கத்துக்குக் காரணமாக இருக்கும் துவாரம் அல்லது இடைவெளியை அறுவை மருத்துவர் சரி செய்வார்.

பொதுவாக அறுவைச் சிகிச்சை நடைபெற்ற அன்றே வீடு திரும்பலாம். சிகிச்சைய ளிப்பதற்கு ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.

அதில், குடலைத் திரும்பவும் அதன் சரியான இடத்தில் வைத்து, அடிவயிற்றுச் சுவரில் தையல்கள் போடப்படும்.


இளவயதினருடன் ஒப்பிடுகையில் வயது முதிர்ந்த வர்களுக்கு ஹெர்னியா பாதிப்பு அதிகம் உள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் வயது முதிர்ந்தவர்களில் தசைகள் (வயிற்றுத் தசைகள் உள்பட) பலவீனம் அடைவதால் இது உள்ளுறுப்புகள் புடைப்பதற்கு வழிவகுக்கிறது.
பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு ஹெர்னியா உருவாகும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலான ஆண்களுக்கு இடுப்புப் பகுதியில் தான் ஹெர்னியா ஏற்படுகிறது.

ஆண்களின் இடுப்பு தசைகள் பலவீன மானவை, இது ஹெர்னியா ஏற்படு வதற்கு வழி வகுக்கிறது.

உங்களுக்கு நீண்ட நாளாக மலச்சிக்கல் இருந்து வந்தால், மிகவும் கஷ்டப்பட்டு மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த கடும் அழுத்தம் காரணமாக மென்மையான வயிற்றுத் திசுக்கள் கிழிவதற்கு வாய்ப்பு உண்டு, இது ஹெர்னி யாவிற்கு வழிவகுக்கும்.


வயிற்றுத் தசைகள் மேல் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதால், இது மெதுவாக அந்தத் தசைகளை பலவீனப் படுத்தும். 

இவ்வாறு தசைகள் பலவீன மாகுதல் ஹெர்னியா ஏற்படுவ தற்கான முக்கிய காரணமாகும்.

சில சமயம் அறுவை சிகிச்சைக்குப் பதில் பழுது பார்க்கப் படலாம்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close