பாம்பு பெண்ணாக மாறிவரும் மாணவி | Snake woman changing student !

இந்தியாவில் 16 வயது மாணவி ஒருவர் அரிய வகை நோயினால் தோல்கள் வறண்டு 6 வாரங்களுக்கு பின்னர் உதிர்வது மீண்டும் வறண்டு போவது போன்ற கொடிய துன்பத்திற்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.


இந்தியாவைச் சேர்ந்தவர் சாலினி யாதவ் (16). இவருக்கு தோல்வியாதி என்று கூறப்படும் அரிய வகை நோயான Erythroderma பாதிப்பு ஏற்பட் டுள்ளது. இந்த நோய் வந்தால் தோல்கள் சிவப்பு நிறத்தில் மாறி அதன் பின்னர் அது வறண்டு காணப்படும்.

இந்த கொடிய நோய்க்கு மருத்துவர்களால் இன்னும் நிரந்தர சிகிச்சை அளிக்கமுடியவில்லை. இந்த நோயினால் அவர் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு

ஒரு முறை தண்ணீரில் தனது உடல்களை நினைத்து கொள்ள வேண்டும்.  முடிந்த அளவிற்கு தன்னுடைய உடலை ஈரப்பதமாகவே வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தோல்கள் அதிக அளவு வறண்டு காணப்படுவது குறையும்.

இது போன்ற தாக்கத்தால் அவரது தோல்கள் மிகவும் வறண்டு காணப்படுவ தால், பாம்புகளில் இருக்கும் உடல் அமைப்பு போன்று காணப்படுகிறது என்று பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள் இவரை கண்டு அஞ்சுவதால், அவர் பள்ளியில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.

இது குறித்து அவரின் தாயார் Devkunwar கூறுகையில், இந்த நோய் அவளுக்கு குழந்தை பருவத்திலே வந்து விட்டதாகவும், இதனால் ஷாலினி அதிக அளவு சிரமத்திற்கு ஆளவதாகவும்,

தான் இருந்தும் தன்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே, இதனால் அவள் ஒரு ஆனாதை போல் காணப்படுகிறாள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக மாநில சமுதாய ஆணையத்திடம் உதவி கேட்ட போது, அவர்கள் இந்த நோயை குணப்படுத்துவது கடினம் என்றும் அவளின் இறப்பே இதற்கு நிரந்தர தீர்வு என கூறியுள்ளனர்.

ஆனால் அவரின் தாயார் இந்த நோய் அவளை கொல்ல வில்லை. இருப்பினும் அவளை சிறுக சிறுக வலியை கொடுத்து கொலை செய்கிறது என கூறியுள்ளார்.

தானும் தன் கணவரும் இவளை படிக்க வைக்க விரும்புவதாகவும், ஆனால் பள்ளியில் ஷாலினியை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதற்கு அவரின் தோற்றம் ஒரு காரணம் என கூறுகின்றனர்.

இந்த கொடிய நோயை முடிந்த அளவிற்கு குறைப்பதற்கு தங்களிடம் அந்த அளவிற்கு பணம் இல்லை எனவும், யாரேனும் உதவி செய்தால் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings