நீங்கள் மிகப்பெரிய பணக்காரர் ஆக !

தலைப்பை பார்த்தவுடனே, நான் இதெல்லா வடிவேலு பார்த்திபன் காமெடிலேயே பார்த்துட்டேனு அப்படியே போயிராதிங்க…
இது அது இல்லைங்க. கொஞ்ம் உள்ள போயி படிச்சு பாருங்க. இன்றைய கால கட்டத்தில் இளைஞர் களுக்கு

கோடி எல்லாம் வெறும் தெருக்கோடி தூரம் தான். 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.5,000 சம்பாதித்தாலே அது பெரிய விசயம். 

இப்போதெல்லாம் 20 வயது பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் கால் தூசுக்கு சமம். இப்படி இருக்க,

30 வயதுக்குள் ஒருவர் கோடிஸ்வரனாக முடியுமா? சில இளைஞர் களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால். 

அதே எண்ணத்திலேயே முழு மூச்சோடு செயல்பட்டு அந்தச் சவாலில் வெற்றி பெறவும் துடிப்பார்கள்.

இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங் களுக்குத் தான் பற்றாக்குறை.

லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து கல்லூரிகளில் படிக்கும் போதே, ரூ.10,000 வரை பகுதி நேர வேலையில் சம்பாதிக்க வழி உள்ள இந்தக் காலத்தில்,

30 வயதுக்குள் எவரும் கோடிஸ்வரன் ஆவதும் நிச்சயம் சாத்தியமே! அதற்கான சில வழிகளும் உள்ளன.

அவற்றைப் பற்றிப் பார்ப்போமா?


கோடிஸ்வரனாக ஆசைப்படு:

எப்போதுமே பெரிய அளவில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த 30 வயதுக்குள் கோடிஸ்வரனாகி விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுங்கள்.

அப்போது தான், குறைந்த அளவு லட்சாதிபதியாகவாவது ஆக முடியும்.

ஏழையாக இருக்க வேண்டாம்:

எப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.

பணம் உறங்குவதில்லை:

பணத்திற்குக் காலமோ, நேரமோ, விடுமுறையோ கிடையாது. நீங்களும் அது போலத் தான் இருக்க வேண்டும்.

நல்ல உழைப்பு இருப்பவனை எப்போதுமே பணம் விரும்பும். சரியான வழியில் அல்லது துறையில் உழைப்பை போடுவது ரொம்ப முக்கியம்.
பணத்துக்குப் பின்னால் போ:

இந்தக் காலப் பொருளாதார உலகில் லட்சாதிபதி கோடிஸ்வரன் முதல் வழி, உங்கள் சம்பாத்தியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும். 

பணத்துக்குப் பின்னால் போகக் கூடாது என்று சிலர் சொல்வார்கள். அப்படிக் கிடையாது.

கண்டிப்பாகப் போங்கள். கவனமாகப் பணம் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். வெற்றி நிச்சயம்!

ஆடம்பரம் வேண்டாம்:


சிறுகச் சிறுகக் கஷ்டப்பட்டு சேமித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆடம்பரத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் தொழில் மற்றும் முதலீடுகளில் பணம் நன்றாகக் வரும் வரை ஆடம்பர வாட்ச், விலை உயர்ந்த கார் என்று எந்தப் ஆடம்பரம் வேண்டாம்.

முதலீட்டுக்காக சேமியுங்கள்: 

உங்கள் சேமிப்பெல்லாம் அடுத்த சேமிப்புகளுக் கான பாதுகாப்பான முதலீடுகளாகத் தான் இருக்க வேண்டும்.

அதுவும் பல வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். எந்த ஒரு அவசரக் காரியத்துக்கும் கூட அதை எடுத்துச் செலவு செய்து விட வேண்டாம்.

கடனுக்கு ‘நோ’ :

உங்கள் வளர்ச்சியில் கடன் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தி யத்தைப் பெற்றுத் தராது; 

வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும்.

உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை ‘ரொட்டேட்’ செய்வது வேறு விஷயம்.

‘பொறாமை’ பணம் :

பணம் உங்களுக்கு ஒரு பொறாமைப்படும் காதலி தான். அதற்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுங்கள்.

நீங்கள் வேண்டும் என்று நினைத்தால் அது உங்களுடன் ஒட்டிக் கொள்ளும். நீங்கள் உதறினால், அதுவும் உங்களை உதறி விடும்.
புத்திசாலித்தன முதலீடு :

உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யுங்கள்.

அதையும் புத்திசாலித் தனமாகச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் கடின உழைப்பை விட,


புத்திசாலித் தனமான முதலீடுகள் தான் உங்களுக்குப் பணத்தைப் பெருக்கித் தரும்.

ரோல் மாடல்:

நீங்கள் லட்சாதிபதி ஆவதற்கு, உங்களுக்கென ஒரு ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் எப்படி யெல்லாம் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி, செல்வந்தர்கள் ஆனார்கள் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
Tags: