உலகில் உயரமான மலை எது ?

இந்த உலகில் உயரமான மலை எது என்று கேட்டால், அது நிச்சயமாக எவரெஸ்ட் மலை என்று தான் எல்லோருமே கூறுவார்கள். சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும், 


ஆனால் இதுவே நமது சூரிய குடும்பத்தில் உயரமான மலை எது என்று கேட்டால்,

அதற்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? பதில் தெரிய வில்லை என்றால், கண்டிப் பாகத் தொடர்ந்து படியுங்கள்!

ஒலிம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) என்பது பிரபலமான செவ்வாய் கோளில் இருக்கும் மலைகளுள் ஒன்று.

குறிப்பாக இது ஒரு எரிமலை ஆகும். இது அளவில் எவரெஸ்ட் சிகரத்தினை விடப் பெரியது.

21,900 மீட்டர் அளவுடைய இந்த எரிமலை சூரியக் குடும்பத் திலேயே மிகவும் உயரமான மலையாகக் கருதப்பட்டு வந்தது.

ஆனால், அதன்பின்பு சூரியனைச் சுற்றிவரும் சிறுகோளில் ஒன்றான வெஸ்டாவில் (Vesta) இதை விட அப் பெரிய மலை கண்டு பிடிக்கப் பட்டது.

‘ரெசில்வியா’ (Rheasilvia) என்றழைக் கப்படும் இந்த மலையின் உயரம் ஒலிம்பஸ் மோன்ஸ் மலையினை விட வெறும் 100 மீட்டர் தான் அதிகம்.

இந்த அளவீடுகள் அந்தளவிற்குத் துல்லியம் வாய்ந்ததாக இல்லா விட்டாலும்

தற்போதைய கணக்கின் படி ரெசில்வியா மிகவும் பெரிய மலையாகக் கருதப்பட்டு வருகிறது. 

வெஸ்டாவிற்குச் செலுத்தப்பட்ட விண்கலம் 2011 வரை செய்த ஆய்வில் இந்த மலையானது


மிகப்பெரிய பள்ளத்தி லிருந்து உயரமாக உள்ளது என்பது கண்டறியப் பட்டது.

இந்தப் பள்ளத்தின் விட்டம் மட்டும் 505 கிலோ மீட்டர் (314 மைல்) இருக்குமாம்.

நமது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைப்பதற்கே பல ஆண்டுகள் ஆன

நிலையில், அதை விடப் பெரிய மலைகள் என்றால் எப்படி இருக்கும்? நினைக்கும் போதே வியப்பாக இல்லையா?
Tags: