துபாய் விமான நிலையத்தில் பயணிகள் நுழைய கட்டணம் !

துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான 
மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதி அளித்துள்ளார். இந்த தீர்மானம் எண் 8/2016 துபாய் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதன்படி துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொருவரும் 35 திர்ஹாம் கட்டணமாக செலுத்த வேண்டும். 
(இந்திய மதிப்பில் ரூ.631 வரை) இந்த புதிய கட்டணம் வரும் ஜூன் 30–ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் துபாய் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் மேலும் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும். 

வருகிற 2023–ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் பயணிகளை கையாள துபாய் விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு அரசிதழில் உடனடியாக வெளியிடப்படும்.
Tags: