நம் வாழ்க்கையில் நாம் செய்யும் பெரிய தவறுகள்?

நாம் அனைவரும் தவறுகள் செய்வோம். உண்மை தானே? நம்மில் சிலர் அதில் இருந்து பாடம் கற்பித்துக் கொண்டு, அதனை மீண்டும் இழைக்காமல் இருக்க முயற்சி செய்தாலும், சிலருக்கு தான் செய்வது தவறு என்பது புரிவதே இல்லை. 
நம் வாழ்க்கையில் நாம் செய்யும்  பெரிய தவறுகள்?

அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பார்கள். நம் வாழ்க்கையில் நாம் பொதுவாக செய்யும் மிகப்பெரிய 10 தவறுகளைப் பற்றி பார்க்கலாமா?

1) ஈகோ ஆளுமாறு செய்வது

வாழ்க்கையில் நாம் செய்யும் மோசமான தவறுகளில் ஒன்று; உங்கள் முடிவுகளை கட்டுப்படுத்தவும் ஆளுமாறும் உங்கள் ஈகோவை அனுமதிப்பது.

மனிதனுக்கு இருக்கும் மிக மோசமான குணமாக பார்க்கப்படுகிறது ஈகோ. அது எதுவுமே செய்யப் போவதில்லை.

ஆனால் உங்களிடம் நெருக்கமாக இருப்பவர்களுடனான அந்த உறவு அழிந்து விடும். எனவே உங்கள் ஈகோவை தூர எறியுங்கள். வாழ்க்கையில் அது உங்களை எங்கேயும் எடுத்துச் செல்லாது.

2) தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை என்பது வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும் என்பது பல தத்துவ ஞானிகளின் கருத்தாகும். தாழ்வு மனப்பான்மை என்பது 

உங்கள் வாழ்க்கையை நீங்களே அழித்துக் கொண்டு உங்கள் திறமைகளை அர்த்தமற்றவை யாக்குவதை போலாகும். 

உங்கள அமைப்பை அழித்து விட்டு உங்கள் ஆற்றல்கள் மீது அவநம்பிக்கையை உண்டாக்கி உங்களை நரகத்திற்குள் தள்ளி விடும்.

3) பழைய சாதனைகளால் உங்களை கட்டுப்படுத்துவது

நேற்றைய வெற்றிகளை இன்றைய தேதியின் திருப்திக்கு அழைத்து வராதீர்கள். அது தோல்விக்கான மிகப்பெரிய அடித்தளமாகும்.


4) அனைவரையும் மகிழ்வளிக்க முயற்சிப்பது

அடுத்தவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களின் பிரச்சனை. அடுத்தவர்களுடன் பழகுகையில் இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். 

அதனால் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் நடக்க வேண்டும் என நினைக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யப் போகும் மிகப்பெரிய தவறாகும் இது.

5) காலம் கடத்தல்

காலம் கடத்தினால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத எதிர் மறையான விஷயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். 


அதிகமாக காலம் கடத்தும் குணத்தை கொண்டிருந்தால், அந்த மனப்பான்மையை உடனடியாக மாற்றுங்கள்.

6) ஓய்வூதிய காலத்திற்கு பணம் சேர்க்காதது

வாழ்க்கையை கணிக்க முடிவதால், இன்றைய தேதியில் பல இளைஞர்கள் சம்பாதிக்கும் அனைத்தையும் செலவழித்து விடுகிறார்கள். 

ஆனால் வாழ்க்கை என்ற பயணமோ என்றுமே கணிக்க முடியாத ஒன்றே. உங்கள் முதல் சம்பளத்தை வாங்கியது முதலே உங்கள் ஓய்வூதிய காலத்திற்கான சேமிப்பை தொடங்குங்கள்.

அப்படி செய்யவில்லை என்றால், வாழ்க்கையில் நீங்கள் இழைக்க போகும் மிகப்பெரிய தவறுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

7) மற்றவர்களின் பாதையை தேர்ந்தெடுப்பது

மற்றவர்களின் பாதையை தேர்ந்தெடுப்பது மற்றும் அடுத்தவர்களின் கனவில் வாழ்வது போன்றவைகளும் கூட நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும்.

உங்கள் வாழ்க்கையை அது அழித்து விட காரணமாகி விடும். முடிவில் எதிலுமே திருப்தி ஏற்படாமல் போகும்.


8) அடுத்தவர்களுடன் ஒப்பீடு

பலர் தங்களை அடுத்தவர்களுடன் ஒப்பிடுவார்கள். இது ஒரு வகையில் தவறில்லை. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதையும் உங்களை மதிப்பீடு செய்யவும் இது உதவிடும்.

ஆனால் தேவையில்லாமல், எந்த ஒரு காரணம் இல்லாமல் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டால் உங்களை வாழ்க்கையில் எங்கேயும் அழைத்து செல்லாது. 

கண்டிப்பாக நீங்கள் இழைக்கும் மிகப்பெரிய தவறுகளில் இதுவும் ஒன்றாகும்.

9) உங்கள் வேலையில் ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு எதுவுமே செய்யாமல் இருப்பது

வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளை பற்றி பார்க்கையில், உங்கள் வேலையில் ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு எதுவுமே செய்யாமல் இருப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
நம் வாழ்க்கையில் நாம் செய்யும்  பெரிய தவறுகள்?

இதனால் வாழ்க்கையில் உள்ள பிற அம்சங்களின் மீதுள்ள அழுத்தம் குறைந்து விடும். 


உங்கள் வேலையில் திருப்தி ஏற்படவில்லை யென்றால் உடனே ஏதாவது செய்ய வேண்டியது அவசியமாகும்.

10) பெற்றோர்களை மதிக்காமல் நடப்பது

பிறப்பது, வயதாவது, நோய் வாய்படுவது மற்றும் இறப்பது என அனைத்தையும் நாம் கடக்க வேண்டியிருக்கும்.

அதனால் நீங்களும் ஒரு நாள் பெற்றோராக ஆவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் பெற்றோரை அவமரியாதை செய்வதை தவிர்க்கவும்.
Tags: