விஜய் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் !

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க விருக்கும் புதிய படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். 'தெறி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க விருக்கும் 60வது படத்தின் இயக்குநராக ஒப்பந்த மானார் பரதன்,
விஜய் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் !
இயக்குநர் பரதன் ஏற்கனவே 'கில்லி', 'வீரம்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். மேலும், விஜய் நடிப்பில் 'அழகிய தமிழ் மகன்' படத்தையும் இயக்கி இருக்கிறார்.

விஜய்யின் 60 வது படத்தின் படப் பிடிப்பை மே முதல் வாரம் முதல் தொடங்க படக்குழு திட்ட மிட்டிருக் கிறது. சில நாட்களுக்கு முன்பு இப்படத்தை தயாரிக் கும் விஜயா புரொடக்‌ ஷன்ஸ் அலுவல கத்தில் பூஜை நடை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் எடிட்டராக ப்ரவீன், இசையமை ப்பாளராக சந்தோஷ் நாராயணன், விஜய்யுடன் நடிக்கும் காமெடியனாக சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நாயகியாக நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேசுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
விஜய் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் !
'ரஜினி முருகன்' படத்துக்கு கிடைத்த வரவே ற்பைத் தொடர்ந்து தனுஷ் - பிரபு சாலமன் படம், 'பாம்பு சட்டை', சிவகார்த்தி கேயனின் அடுத்த படம் ஆகிய வற்றில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். 

அப்படங் களைத் தொடர்ந்து விஜய்யின் நாயகி யாக ஒப்பந்த மாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings