இஸ்தான்புல் தற்கொலைத் தாக்குதல் !

இங்கு நேற்று நடந்த தற்கொலைப் படை வெடிகுண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்ட 10 பேரில் 8 பேர் ஜெர்மானியர்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது. 
இஸ்தான்புல் தற்கொலைத் தாக்குதல் !
சிரியாவைச் சேர்ந்த தற்கொலைத் தாக்குதல்காரன் ஒருவன் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளான் என்பதை துருக்கியின் அதிபர் தாயிப் எர்டோகன் உறுதிப் படுத்தியுள்ளார். 

1988ஆம் ஆண்டில் பிறந்தவன் இந்தத் தாக்குதல்காரன் என்பதும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் சம்பந்தப் பட்டுள்ளது என்றும் துருக்கி அறிவித்துள்ளது. 

துருக்கிய அதிபர் எர்டோகன் ஜெர்மன் அதிபர் மெர்கலுடன் தொலைபேசியில் உரையாடி தனது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்பதோடு, இருவர் கடுமையான அளவில் காயங்களோடு போராடி வருகின்றனர். 

காயமடைந்தவர்களில் நார்வே, பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். துருக்கி ஜெர்மன் மக்கள் அடிக்கடி செல்லும் பிரபலமான சுற்றுலாத் தளமாகும். 

உள்நாட்டு நேரப்படி காலை 10.15 மணியளவில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டுத் தாக்குதலின் சத்தம் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கூட்டம் அதிகமாகக் குவியும் துருக்கி நாட்டுப் பகுதிகளைத் தவிர்க்குமாறு ஜெர்மன் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்தான்புல் தற்கொலைத் தாக்குதல் !
இந்தத் தாக்குதல் ஒரு கொலைகாரச் செயல் என ஜெர்மன் அதிபர் மெர்கல் வர்ணித்துள்ளதோடு, இதற்கு தகுந்த பதிலடி நடவடிக்கையை ஜெர்மனி எடுக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியில் புகழ்பெற்ற வரலாற்று பிரசித்தி பெற்ற நீல பள்ளிவாசலும், அருங்காட்சியகமும் அமைந்துள்ள பகுதியில், 

சுற்றுப் பயணிகளும், பொதுமக்களும் அதிகம் கூடும் இடத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings