ஹைட்ரஜன் குண்டு சோதனை.. சீனாவில் 500 பேருக்கு கதிர் வீச்சுத் தாக்குதலா?

வட கொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதி சக்தி வந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நிகழ்த்தி உள்ள நிலையில், 
ஹைட்ரஜன் குண்டு சோதனை.. சீனாவில் 500 பேருக்கு கதிர் வீச்சுத் தாக்குதலா?
சீனா-வட கொரிய எல்லையில் இருக்கும் மக்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலை யில், சீன அர சாங்கம், இரு நாட்டு எல்லையில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு கதிர்வீச்சு சோதனை நடத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 500க்கும் மேற்பட்ட மக்களை நாங்கள் கண்கா ணித்து வருகிறோம். 

அவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு இருக்கிறதா? என சோதனைகள் நடத்தப்பட்ட வருகிறன என்று தெரிவித்துள்ளது. 

அதேசமயம் அமைச்சகம், காற்று, மண் மற்றும் நீர் ஆதாரங்களை சோதனை செய்து வருவதாகவும், பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளது.
ஹைட்ரஜன் குண்டு சோதனை.. சீனாவில் 500 பேருக்கு கதிர் வீச்சுத் தாக்குதலா?
இதற் கிடையே சீன அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலில், சீனா எல்லைகளில் உள்ள மக்களுக்கு எவ்வித பதிப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

வட கொரியாவின் இராஜாங்க ரீதியிலான ஆதரவாளரான சீனா, அந்நாட்டின் எதிர்பாராத இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவி த்துள்ளது.

மேலும் ஐநா, வட கொரியா மீது விதிக்க இருக்கும் பொருளாதாரத் தடைகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings