நோயைக் காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ !

நாம் சாப்பிட்ட உணவு நன்றாக செரித்திருக்கிறதா? ஆரோக்கியமாகத் தான் சாப்பிட்டோமா என்பதை மலம் காட்டும் அறிகுறிகள் மூலமாகவே கண்டுபிடித்து விடலாம்.
நோயைக் காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ !
மலம், தண்ணீரில் மிதந்தால், நன்றாக செரிமானம் ஆகியிருக்கிறது, ஆரோக்கிய மான உணவைத் தான் உண்டோம் என்று அர்த்தம்.

மலம், தண்ணீரில் மூழ்கினால் கபம் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். அதாவது, நமது செரிமான சக்தியைத் தாண்டி அதிகமாக வேலை கொடுத்திரு க்கிறோம். 
அதற்கு சீரகம், மிளகு, புளி சேர்த்த ரசம் குடித்தால் சரியாகி விடும். நாம் சாப்பிடும் ஹெவி மீல்ஸில் ரசம் இடம் பெறுவதற்கு  இதுதான்  காரணம்.
வாதம் ஜாஸ்தி யானால், மலம் மிகவும் டைட்டாக போகும். அப்படி யானால் உடலில் வறட்சி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். நிறைய தண்ணீர் குடிக்கலாம், உணவில் பசு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

பித்தம் ஜாஸ்தியாக இருந்தால் மிகவும் தளர போகும். எரிச்சல், வலி அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால் நீர் மோர் அதிகம் குடித்து வர சரியாகும்.
Tags: