உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசுவர்த்தி சுருள் !

வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், கொசுக்கள் மட்டும் எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. அவ்வாறு கொசுக்கள் வருவதால் இரவில் நன்றாக தூங்க முடியாமல் அவஸ்தை படுகிறோம்.
உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசுவர்த்தி சுருள் !
இந்த அவஸ்தையை நீக்க கடைகளில் கொசுக்களை விரட்ட விற்கப்படும் கொசுவர்த்தி, மேட், கிரீம் போன்ற பொருட்களைப் பயன்படுத்துகிறோம். 

அவ்வாறு அவற்றை பயன்படுத்துவதால் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அதிலும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 சிகரெட்களுக்கு சமம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

மேலும் அந்த ஆய்வில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் கெமிக்கலான அலெத்ரின் (alletrin) இருக்கிறது. 

இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை, நமது நுரையீரல் களையும் அழிக்கிறது. 
ஏனெனில் அதனை இரவில் தூக்கும் போது அதிகம் சுவாசிப்பதால், நமது உடலில் நல்ல ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு, 

மாசுபட்டிருக்கும் காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அந்த காற்று அடைபட்டு நுரையீரலின் அரையை பாதிக்கிறது.

சிலர் கொசுக்களுக்கு பயந்து மாலை நேரத்தில் இருந்தே வீட்டு ஜன்னல்கள், கதவுகள் என்று அனைத்தையும் அடைத்து விட்டு இந்த கொசு விரட்டிகளை போட்டு விடுகின்றனர். 

அது மட்டுமல்லாமல், அவ்வாறு அடைத்து விடுவதால் வீட்டில் சமைக்கும் போது வரும் புகை, இந்த கொசு விரட்டிகளால் வரும் புகை என்று வீட்டில் நல்ல காற்றை விட, 
உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசுவர்த்தி சுருள் !
அசுத்தமான காற்று இருப்பதால் அவற்றை சுவாசிக்கும் போது அந்த கொசு விரட்டிகளில் உள்ள விஷம் உடலில் வந்து விட்டது என்பதற்கு அறிகுறியாக முதலில் சளி, காய்ச்சல் என்று ஆரம்பிக்கும். 

இவை மூன்று நாட்கள் நீடித்தால் அதனை அலர்ஜி என்று முடிவு செய்து அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஒரு நோயாளியாக நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.

பின்னர் அந்த நிலை சற்று படிப்படியாக முன்னேறியதன் அறிகுறியாக உடலில் ஆஸ்துமா என்னும் நோய் வந்து விடுகிறது.

சில பிறந்த குழந்தைகள் அந்த மேட் புகையை சுவாசித்தால், வலிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் கூறப்ப டுகிறது. 
அதுமட்டுமல்லாமல் அந்த புகையை சுவாசிப்பதால் சில சமயங்களில் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்றும்,

கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்க வல்லது என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
Tags:
Privacy and cookie settings