நாம் உண்ணும் சில உணவுகள் பற்களுக்கு நல்லதா கெட்டதா?

வீட்டில் சமைக்கப்படும் இந்திய உணவு வகைகளை உண்ணுவதை விட வேறு எதிலும் ஆரோக்கியம் இல்லை என்பது நமக்கு அடிக்கடி சொல்ல ப்படும் ஒரு விஷயமாகும்.
 


அது உண்மையாக இருந்தாலும் கூட, இவ்வகை யான உணவுகள் உங்கள் பற்களுக்கு அளிக்கும் நன்மைகள் மற்றும் தீமை களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். 

தவறான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் முறையற்ற பல்லுக்குரிய பழக்க வழக்கங்கள் போன்றவைகள் எனாமலை அரிக்க வைக்கும். 

இதனால் பற்கூச்சம் ஏற்படும். இப்போது சமயலறைக்கு ஒரு சின்ன பயணம் சென்று உங்கள் பற்களுக்கு எது நல்லது, எது கெட்டது போன்ற வற்றைப் பார்க்கலாமா? 

நம் உணவு களுக்கு அருமையான சுவைமணம் அளிப்பதனால் மட்டும் வெங்காயம் புகழ் பெறவில்லை. 

பாக்டீரியாவை நீக்கி, நம் உடலையும், வாயையும் இயற்கையான முறையில் வெங்காயம் சுத்தப் படுத்தும். இருப்பினும், வெங்காயம் நிறைந்த உணவுடன் சற்று புதினாவையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறந்த பலன் பெறலாம்.

ஊறுகாய் தயாரிப்பதில் வினீகர் மற்றும் பதப்படுத் தப்படும் பொருட்கள் பயன் படுத்துவதால் இதில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால் இவைகளை மிதமான அளவில் உண்ணுவது நல்லது.

இந்த சிறிய விதைகளில் கால்சியம் வழமையாக உள்ளதால், அது உங்கள் பற்களை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். இதுப்போக பற்படலத்தை இந்த விதைகள் கரைக்கும்.


உலர்ந்த பழங்கள் பிசுப்பிசுப் பாகவும், அதிக சர்க்கரை யுடனும் இருக்கும். அப்படி யானால் அவை பற்களில் வேகமாக ஒட்டிக் கொள்வதோடு மட்டுமல்லாது, அதிலுள்ள சர்க்கரை வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாக அமையும். 

பாக்டீரியாக்கள் சர்க்கரையை உண்ணுவதால், அவை அமிலத்தை வெளியேற்றும். இது பற்களை அரிக்க தொடங்கி விடும். அதனால் அவைகளை அதிகமாக உண்ணாதீர்கள்.

இந்திய உணவு வகைகளில் இது கட்டாயமானது தான் என்றாலும் கூட குழம்புகளில் மசாலாக்களும், அமிலத்தை உண்டாக்கும் பொருட்களும் இருக்கும். அதனால் அவற்றை உட்கொண்ட பிறகு வாயை நன்றாக அலசவும்.
Tags: