ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா? உண்மை என்ன?

ஹெல்மெட் கட்டாய மாக்கப்பட்ட திலிருந்து பல பேச்சிலர் களின் கவலையே முடி கொட்டி விடுமே என்பது தான். ஹெல்மெட் போட்டால் முடி கொட்டி விடும் என்று சில செய்திகளும், அது ஒரு காரணம் இல்லை என்று மறு தரப்பு வாதங்களும் உலவு கின்றன.
ஹெல்மெட் அணிந்தால்


இந்தநிலையில், ஹெல்மெட் போட்டால் முடி கொட்டுமா என்பது பற்றிய ஒரு சில விஷயங் களையும், முடி கொட்டு வதற்கான காரணங்களை் மற்றும் தீர்வுகளையும் இந்த செய்தியில் காணலாம்.

டிராக்ஷன் அலோபீசியா! 

முடிகொட்டு வதற்கான காரணங் களில் ஒன்றாக இதனை கூறுகின்றனர். அதாவது, மிகவும் கெட்டியாக முடியை ரப்பர் பேண்டுகளால் கட்டி வைக்கும் போதும்

அல்லது ஹெல்மெட் அணியும் போது, அது முடியின் வேர் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நாள் ஆக ஆக வேர் வலுவிழந்து முடி கொட்டும். 

சரியான அளவு ஹெல்மெட் 

ஹெல்மெட் அணியும் போது உங்கள் தலைக்கு சரியான அளவு கொண்ட ஹெல்மெட்டு களை வாங்கி அணிய வேண்டியது அவசியம். மேலும், ஹெல்மெட் அணியும் போது மேலே,

கீழே, பக்கவாட்டில் ஒரு அசைவு அசைத்து பின்னர் சவுகரியமாக உணர்ந்த பின் ஸ்ட்ராப்பை போட்டுக் கொள்ளுங்கள். தலை முடியை உறுத்தாதவாறு இருக்க வேண்டும்.

பாக்டீரியா பிரச்னை 

தலையில் ஏற்படும் வியர்வை காரணமாக ஹெல்மெட்டின் உள்பகுதியில் அழுக்கு சேர்ந்து பாக்டீரியா குடி கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.

எனவே, வாரம் ஒருமுறை ஹெல்மெட்டின் உள்பகுதியை சுத்தப் படுத்துவதுடன், வெயில் படுமாறு வைத்து எடுப்பது அவசியம். இந்த பாக்டீரியாக்கள் முடி வளர்ச்சியை பாதிப்பு ஏற்படுத்தும்.

ரத்த ஓட்டம் 

முடி கொட்டுவதற்கான மற்றொரு காரணம், முடியின் வேர் பகுதிக்கு ரத்தத்தி லிருந்து கிடைக்கும் சத்துக்கள் குறைந்து போவதும் ஆகும்.
ரத்த ஓட்டம்


தலையை மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் முடியின் வேர் பகுதிக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும்.

ஊட்டச் சத்து குறைபாடு 

முடியின் வேர் பகுதியை பலப்படுத்தவும், முடி வளர்ச்சிக்குமான பிரத்யேக ஊட்டச் சத்து உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மரபணு காரணஙகள் 

வம்சாவளியாக வரும் மரபணு பிரச்னைகளும் முடி கொட்டுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. எனவே, ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும் என்று ஊர்ஜிதமாக சொல்ல முடியாது.

பாதுகாப்பு முக்கியம்... 

பாதுகாப்பு என்று வரும்போது ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்ந்து அணிவதே புத்திசாலித்தனம். மேலும், ஹெல்மெட் அணியும் எல்லோருக்கும் முடி கொட்டுவதில்லை.

எனவே, உயிரை காக்க தலை காக்கும் கவசத்தை கட்டாயம் அணியுங்கள். மேற்கூறிய, காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை கையாண்டு முடி கொட்டும் பிரச்னையை தவிர்த்துக்கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது.
Tags:
Privacy and cookie settings