தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக உணர்கிறீர்களா?

ஒவ்வொருவரும் காலையில் எழுந்ததும், இந்த நாள் இனிய நாளாக இருக்க வேண்டுமென்று நினைப்போம். ஆனால் அதற்கு மாறாக மிகவும் களைப்பாக உணர்ந்தால், நமக்கே நம்மீது ஒரு வித ஆத்திரம் ஏற்படும்.
தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக உணர்கிறீர்களா?
அதிலும் சிலருக்கு இரவில் நன்கு தூங்கியது போல் இருக்கும், அப்படி இருந்தும் மிகுந்த களைப்பை உணர்வார்கள். 

இன்னும் சிலர் தூக்கமின்மையால் தான் இந்த நிலை ஏற்படுகிறது என்று நினைப்பார்கள். ஆனால் இவற்றிற் கெல்லாம் நம் பழக்கவழக்கங்கள் மற்றும் ஒருசில செயல்கள் தான் முக்கிய காரணம். 

அது மட்டுமின்றி, உடலில் இருக்கும் ஒருசில பிரச்சனைகளும் காரணமாக இருக்கும். இப்போது அந்த பிரச்சனைகள் பற்றியும், அதற்கான தீர்வைப் பற்றியும் காண்போம்.
அலுவலகத்தில் உள்ள அதிகப் படியான வேலைப் பளுவினால் பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படி மன அழுத்தத்தில் இருந்தால், மூளை சுறுசுறுப்பாக செயல்படாது. 

எனவே தான் களைப்பு ஏற்படுகிறது. இந்த களைப்பை போக்க, அலுவலக த்திற்கு லீவு போட்டு, நண்பர்களுடன் சுற்றுங்கள் அல்லது பிடித்தவர் களுடன் வெளியே சென்று நேரத்தை செலவிடுங்கள்.
தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக உணர்கிறீர்களா?
ஜங்க் உணவுகளை சாப்பிடுவதால், அதில் உள்ள கலோரிகளால் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல், உடல் மந்தமாக இருப்பதோடு, உடல் பருமனடையும். 

ஆகவே ஜங்க் உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக் கொள்வதை விட, முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

காலையில் அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதென்று காலையில் சாப்பிடுவது பலரும் தவிர்த்து விடுகின்றனர். ஒரு நாளில் காலை உணவு என்பது மிகவும் முக்கியம். 

அதிலும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமெனில், காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், நிச்சயம் நாள் முழுவதும் மிகுந்த களைப்பை உணர்வீர்கள்.
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதோடு, உடல் வறட்சியடையும்.

இப்படி உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால், உடல் சோர்வடைந்து விடும். எனவே தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக உணர்கிறீர்களா?
உடலில் வைட்டமின் குறைபாடுகள் இருந்தாலும், அதிகப்படியான களைப்பை உணர்வோம். அதிலும் வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், உடலில் மந்த நிலை ஏற்படும்.

இதய நோய் இருந்தால் உடல் அதிகம் களைப்படையும். ஏனெனில் இதயத்திற்கு போதிய இரத்தம் செல்லாமல் இருப்பதால்,
உடலின் மற்ற பாகங்களுக்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, ஆற்றல் கிடைக்காமல் போகும். ஆகவே உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Tags: