டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றி பயப்பட வேண்டாம் !





டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றி பயப்பட வேண்டாம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
மழைக் காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல், இருமல், டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற 
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றி பயப்பட வேண்டாம் !

தொற்று நோய்களை தவிர சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில் இந்த அச்சம் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. 

தற்போது மக்களின் பெரும் அச்சத்துக்கு காரணமான டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு வைரஸ் நோயாகும்.

இந்த வைரஸ் டைப்1, டைப்2, டைப்3 மற்றும் டைப்4 ஆகிய 4 வகைகளில் உள்ளது. வெப்ப மண்டல நாடுகளில் காணப்படும் ஏடிஸ், ஏஜிப்டி என்ற கொசுவால் இது பரவுகிறது. 

1990ம் ஆண்டுகளில் ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் நோயாக டெங்கு அடையாளம் காணப் பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் லட்சக்கணக் கானோர் பாதிக்கப் பட்டனர். 

ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு அதிகமாக காணப்படும் தென் கிழக்காசிய நாடுகள், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக வருகிறது.

இந்த காய்ச்சல் கண்ட ஒருவரை கடிக்கும் ஏடிஸ் வகை கொசு மற்றொரு வரை கடிக்கும் போது அவருக்கும் டெங்கு வைரஸ் தொற்றுகிறது.

டெங்கு காய்ச்சல் தீவிரமாகும் போது மூக்கு, பல் ஈறு மற்றும் தோலிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படும்.

வயிற்று குடலினுள் ரத்தம் வடியும் நிலை ஏற்பட்டால் வாந்தி காபி கொட்டை நிறத்தில், மலம் கறுப்பு நிறத்தில் வெளியேறும்.

டெங்கு என்ற ஸ்பானிய மொழிச்சொல் எலும்பு முறிக்காய்ச்சல் என பொருள்படும். இந்நோய் டெங்கு வைரசால் ஏற்படுகிறது. 

நோய் அறிகுறிகள்...
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றி பயப்பட வேண்டாம் !

* அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை.

* ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் நிலை.

* ரத்தப் பெருக்குடன் கூடிய டெங்குக் காய்ச்சல் நிலை.

* டெங்கு அதிர்ச்சி அறிகுறி நிலை. முதல் நிலையை தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும். 

ஆரம்ப நிலை டெங்கு காய்ச்சல் ஓரிரு நாட்களில் குறையவில்லை. எனில் உடனடியாக உரிய சிகிச்சை பெற்றால் மரணத்தை தவிர்க்க முடியும். 

கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, முன்தலை பக்கத்தில், கண்களின் பின் புறத்தில் வலி, கண்களை உருட்டும் போது கடுமையான வலி, உடல்வலி, மூட்டுக்கள், தசைகள், கை, கால்,

எலும்பு போன்றவற்றில் வலி, குமட்டல், வாந்தி, சிறிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட சிரங்குகள், கண் சிவத்தல், 

உடல் சோர்ந்து வெளிறிய நிலை, பசியின்மை, வெளிச் சத்திற்கு பயம், திடீரென காய்ச்சல் குறைதல் போன்றவை ஏற்படும்.
இந்தியா வாங்கியுள்ள அப்பாச்சி ரக ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்?
உடம்பு குளிர்தல், பதற்றம், அரைத்தூக்கம், அதிர்ச்சி நிலை, அதிகரித்த சுவாசம், அதிகரித்த நாடித்துடிப்பு, 

தோலில் ரத்தக்கசிவு, ரத்த வாந்தி, கறுப்பு நிற மலம், வயிறு, கால் முதலிய வற்றில் வீக்கம்,

ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைப்படுவது, ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் 

மற்றும் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் முதலியன டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.

ரத்தத்தில் சிறு தட்டுகளின் எண்ணிக்கை 28,000க்கு கீழ் குறையும் போது நுரையீர லுக்குள் தண்ணீர் புகுந்து மரணம் ஏற்படும். 

இந்நிலை ஏற்பட்ட பின் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற் றுதல் மிகவும் கடினம்.

நோயை கண்டறிதல்: 
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றி பயப்பட வேண்டாம் !

வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல். அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக் களின் அளவு (400010,000 சி.எம்.). 


டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள ரத்த தட்டு க்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும்.

டெங்கு வைரஸிற்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி பயாடிக் என்று அழைக்கப்படும் எதிர்ப்பு சக்தியை 

பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும்.

சிகிச்சை: 
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றி பயப்பட வேண்டாம் !

டெங்கு காய்ச்சலை பொறுத்த வரை ஓய்வு அவசியம். திரவ வகை உணவு அதிகம் உட்கொள்ளலாம். 


உடல் உஷ்ணத்தை குறைக்க அசிட்டாமினோஃபென் மாத்திரைகளை பயன்படுத்தலாம்.

ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். 

டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை.

காய்ச்சலை குறைப்பது, ரத்ததட்டு அணுக்கள் குறைவதை தடுப்பது போன்றவைகளுக்கு பொதுவான சிகிச்சை வழங்கப்படுகிறது. 
அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றிய உண்மைகள் !
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது.

சித்த மருத்து வத்தில் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும். 

நிலவேம்பு கசாயம் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலை வேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

சிக்குன் குனியா : 
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றி பயப்பட வேண்டாம் !

சிக்குன் குனியா நோயும் ஈடிசு ஈஜிப்டை என்ற கொசு கடிப்பதால் தான் பரவுகிறது. 


ஈடிசு ஈஜிப்டை, ஈடிசு அல்போபிக்டசு இரு வகைக் கொசுக்கள் திறந்த வெளியில் இருக்கும் போது கடிக்கும். 

ஈஜிப்டை வகைக் கொசு வீடுகளின் உள்புறங்களிலும் உலவுவதால் உள்புறங்களிலும் கடிக்கின்றன.
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் அதை கடித்த பெண் !
பெரும்பாலும் இவை பகல் நேரங்களிலும், அதிலும் குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகம் கடிப்பவை. 

இவை இரவில் கடிப்பதில்லை. அதிலும் பெண் கொசுக்கள் தான் கடிக்கின்றன.

அதிகமான காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறி குறிகளாகும். 

தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் இருக்கக் கூடும். பெரும்பாலும், ஓரிரு நாட்கள் நீடித்த பின்னர் காய்ச்சல் குறைந்து விடும்.

எனினும், கடுமையான தலைவலி, மூட்டு வலி, தூக்கமின்மை ஆகியவை ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கக் கூடும். 

அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றால் ஒரு வாரத்திலேயே நோய் குணமாகும்.

மேலும் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு சாறு ஆகியவற்றையும் குடிக்கலாம். 

கொசுக்களை ஒழிக்க... 
டெங்கு மற்றும் சிக்குன் குனியா பற்றி பயப்பட வேண்டாம் !

* தண்ணீர் தேங்கி நிற்கும் எல்லா இடங்களையும் சுத்தம் செய்து, மண் அல்லது மணல் மூலம் நிரப்பி விட வேண்டும்.

* சுற்று புறத்தில் உள்ள தண்ணீர் தேங்கக் கூடிய பிளாஸ்டிக் பைகள், உடைந்த பானைகள், கண்ணாடி பாட்டில்கள், பழையை டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை புதைத்து விட வேண்டும்.

* பயன் படுத்தாத பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும்.

* பூந்தொட்டிகள், பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும்.
உங்கள் கூந்தலின் எதிரி ஈரம் !
* எறும்பு வராமல் இருக்க மேசை கால்களுக்கு வைக்கும் பாத்திரங்களின் தண்ணீரையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்ற வேண்டும்.

* ஏசியிலிருந்து வெளியேறும் நீரையும் மாற்ற வேண்டும்.

* தண்ணீரை அகற்ற முடியாத இடங்களில் உப்பை சேர்க்கலாம்.

* கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்கலாம்.
Tags: