பெப்டிக் அல்சர் அறிகுறிகளை அறிவோம் !

நேரத்துக்கு சரியா சாப்பிட மாட்டேன். அது தான் அல்சர் வந்திடுச்சு  இப்போ தெல்லாம் சர்வசாதாரணமாகக் கேட்கும் புலம்பல் இது. அல்சர் பற்றி கொஞ்சம் அலசுவோமா? 
பெப்டிக் அல்சர் அறிகுறிகளை அறிவோம் ! 
உணவுக் குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதி உட்சுவரில் தோன்றும் புண்களை குடல் புண் என்கிறோம். வயிற்று வலி தான் இதன் பொதுவான அறிகுறி.

வகை 

இரைப்பை யில் ஏற்படக் கூடிய புண்களை ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ என்றும், உணவுப் பாதையில் ஏற்படக் கூடிய புண்களை ‘ஈசோபேகல் அல்சர்’ என்றும்,

சிறுகுடலின் முன் பகுதியில் ஏற்படக் கூடிய புண்களை ‘டியோடனல் அல்சர்’ என்றும் சொல்வார்கள்

மனைவிகள் எதிர்பார்க்கும் விஷயம் !

அறிகுறிகள் 

* பெப்டிக் அல்சர் இருப்பவர் களுக்கு, வயிறு பற்றி எரிவது போன்ற உணர்வு இருக்கும்.

* புண் உள்ள இடத்தில் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் படும்போது தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.
பெப்டிக் அல்சர் அறிகுறி
 *இந்த வலி, தொப்புள் முதல் மார்பு எலும்பு வரை எந்தப் பகுதியில் வேண்டு மானாலும் ஏற்படலாம்.

* எதுவும் சாப்பிடாமல், வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகம் ஆகும்.

* இரவில் வலி மேலும் அதிகரிக்கும். 

* சில நாட்களோ, சில வாரங்களோ வலி மறைந்து பிறகு மீண்டும் வெளிப்படும்.
* வலி அதிகம் ஆகும்போது ரத்த வாந்தி வரலாம். அது, சிவப்பாகவோ கருப் பாகவோ இருக்கலாம்.

* மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறும். அல்லது மலம் கறுப்பு நிறத்தில் இருக்கும்.

* வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு.


* உடல் எடை குறைவு.

* பசியில் மாற்றம்.

காரணம் 

பொதுவாக காரமான உணவு உட்கொள்வது, சரியாக உணவு உட்கொள் ளாதது, மன அழுத்தம்… ஆகியவை தான் அல்சர்  வருவதற்குக் காரணங்கள் என்று சொல்லப் பட்டது.

ஆனால், பெரும் பான்மையான அல்சர் உண்டாவதற்கு பாக்டீரி யாவே காரணம் என்று கண்ட றியப்பட் டுள்ளது.

உணவுக் குழாயின் உள்பகுதியைப் பாதுகாக்க சளி போன்ற படலம் உள்ளது. அமிலம் உணவுக் குழாயில் அதிகமாகப் படரும் போது, அது அந்த சளிப் படலத்தைப் பாதித்து புண்களை ஏற்படுத்தி விடு்கிறது.

தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, இரைப்பை மற்றும் சிறுகுடலின் உள்சுவர் களைப் பாதித்து புண்கள் ஏற்படுவ தற்கான வாய்ப்பை அதிகரி க்கிறது.
தவிர்க்க 

*எச்.பைலரி பாக்டீரியா எப்படிப் பரவுகிறது என்று இதுவரை தெளிவாகக் கண்ட றியப்பட வில்லை.

ஆனால் உணவு மற்றும் தண்ணீர் வழியாக ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு வருக்கு இந்த பாக்டீரியா பரவுவதற்கு சில உதார ணங்கள் உள்ளன.
பெப்டிக் அல்சர்
எனவே, உணவு சமைக்கும் போதும் சாப்பிடும் போதும், கழிப்பறை க்குச் சென்று திரும்பிய பிறகும் கண்டிப்பாக சோப் போட்டு கை கழுவ வேண்டும்.

*மது அருந்துதல், புகைப் பிடித்தல், குளிர் பானங்கள் குடித்தலைத் தவிர்க்க வேண்டும்.


*டாக்டர் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

மாத்திரை எடுத்துக் ்கொண்டே மது அருந்துவது வயிறு பாதிப்பு மற்றும் புண் ஏற்படுவ தற்கான வாய்ப்பைப் பல மடங்கு அதிகரி்க்கும்.

சிகரெட் 

எச்.பைலரி பாக்டீரியா வால் பாதிக்கப் பட்டவர் சிகரெட் புகைப் பவராக இருந்தால் அது வயிற்றுப் புண்கள் ஏற்படு வதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.

ஆல்கஹால் 

மது அருந்தும் பழக்கம் இரைப்பை யின் உட்சுவரைப் பாதிக்கிறது. இரைப்பை அமிலங்கள் சுரப்பை அதிகரித்து குடல் புண்ணை ஏற்படு த்துகிறது.
Tags: