எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் மீன் !

டார்பிடோ ரேஸ் : மத்திய தரைக் கடலிலும், வேறு சில கடல் பகுதிகளிலும் வாழும் ஸ்கேட்ஸ் என்ற மீன் வகை உள்ளது. இவற்றை டார்பிடோ ரேஸ் என்றும் அழைப்பார்கள்.
எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் மீன் !
இந்த மீன்களின் பழக்க வழக்கங்களை பண்டைய ரோமானியர்கள் ஓரளவு அறிந்து வைத்திருந்தார்கள். இம்மீன்கள் நீந்தும் போது அமைதியாகவும், மெதுவாகவும் நீந்தும்.

இவற்றின் அருகே வேறு சிறு மீன்களோ, நண்டுகளோ, பிற கடல்வாழ் உயிரிகளோ வந்து விட்டால் சுரீர் என்று மின்சார அதிர்ச்சி கொடுக்கும்.

அதில் அவை துடித்து மடியும். பின்னர் அவற்றை இந்த மீன்கள் உணவாக எடுத்துக் கொள்ளும்.

இந்த மீன்கள் தோற்றுவிக்கும் சக்தி, மின்சாரம் என்பது அக்கால ரோமானியர் களுக்குத் தெரியவில்லை.

இவை ஏதோ விஷத் தன்மையுள்ள பொருட்களை வெளியிட்டுத்தான் தமது குறையைச் சொல்கின்றன என்று நம்பினர்.

தங்கள் மருத்துவச் சிகிச்சைகளுக்காக இம்மீன்களை பெரிய தொட்டிகளில் வைத்து வளர்த்தார்கள்.

ஸ்கேட் மீன்களைப் போலவே மின்சக்தியை வெளிப்படுத்தும் மற்றொரு மீன் வகை, ஈல் என்பதாகும்.

ஆனால் இவை நன்னீரில் வாழ்பவை. இந்த மீன்கள் இரவில் மட்டுமே வெளியே வந்து தம் இரையைத் தேடும்.

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியின் ஆழமற்ற பகுதிகளில் இம்மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் மீன் !
இவை வெளிப்படுத்தும் மின்சக்தி, பெரிய மீன்களைக் கூட செயலற்றுப் போகச் செய்யும் அளவுக்குப் பலமானது.

இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் பூர்வீகக் குடிமக்கள் அந்நதியில் இறங்கி நடக்கவே அஞ்சுகிறார்கள்.

இந்த மீன்களின் உடலிலிருந்து தோன்றும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

சாதாரணமாக நம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரத்தின் அளவு 220 வோல்டுகள் ஆகும். ஆனால் ஈல் தோற்றுவிக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 600 வோல்ட்!

இவ்வளவு மின்சக்தியை அந்த மீன் பெற்றுள்ளது, அது வாழும் நன்னீர் சூழலுக்கு ஏற்றதே ஆகும். நன்னீர், மின்சாரத்தைக் கடத்தும் பண்பு கொண்ட தில்லை.

மின்சாரம் உண்டாக்கும் ஈல்
எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் மீன் !
கடல் நீரில் வாழும் ஸ்கேட் மீன் தோற்றுவிப்பது 60 வோல்ட் மின்சாரம் என்றாலும், கடல்நீர் மின்சாரத்தைக் கடத்தும் பண்பு உடையது.

ஆகையால் இக்குறைந்த அளவு மின்சாரம் அம்மீனுக்குப் போதுமானது. மீன்கள் எவ்வாறு அவற்றின் உடலில் இருந்து மின்சாரத்தைத் தோற்று விக்கின்றன?

அதற்குப் பயன்படுவது அவற்றின் உடலில் உள்ள நரம்பு முனைகளும், தசைகளும் தான்.

நரம்பு முனைகள் தான் மின்வாய்த் தகடுகளாக அமைகின்றன. இந்தத் தகடுகள் தொகுதி தொகுதியாய் அமைந்துள்ளன.

ஒரு தொகுதியில் உள்ள தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்துள்ளன. ஆனால் தொகுதிகள் எல்லாம் தங்களுக்குள் பக்க அடுக்கில் அமைந்துள்ளன.

சாதாரணமாக, மின்சாரத்தைத் தோற்று விக்கும் உறுப்பு, எலும்புடன் இணைந்த தசையுடன்தான் அமைந்திருக்கும்.

நரம்பால் உண்டாகும் தூண்டுதலின்போது இந்த எலும்புத் தசை சுருங்கும். அப்போது மின் தூண்டல் ஏற்படுகிறது.

அந்த மின் தூண்டல், தசையிலிருந்து நரம்பு முனையை அடையும் போது ஒரு சிறப்பு ரசாயனப் பொருள் அங்கு சுரக்கப்படும். அதன் விளைவாகவே தசைகள் சுருங்கும்.

ஆனால் மின் உற்பத்தி உறுப்பால் தசைகள் சுருங்கிக் கொள்வதில்லை.

அதற்குப் பதிலாக அவை மின் தூண்டலைத் தோற்று விக்கும் உறுப்புகளாக இயங்குகின்றன.

சாதாரணமாக இப்படித் தோன்றும் ஒவ்வொரு சிறு மின் தூண்டலும் சுமார் 150 மில்லி வோல்ட் திறன் கொண்டதாகும்.
எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் மீன் !
ஈல் மீனின் மின் உற்பத்தி உறுப்பில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் 6ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உள்ள

இத்தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்து செயல் படுவதால் அதன் மொத்தப் பலனாக 600 வோல்ட் மின்சாரம் தோற்று விக்கப்படுகிறது.

அதே நேரம் டார்பிடோ ரேஸ் மீனில் சுமார் ஆயிரம் தகடுகள் தான் ஒரு தொகுதியில் உள்ளன. இத்தொகுதிகள் 200 தான் உள்ளன.

அவையும் பக்க அடுக்கில் இணைந்திருப் பதால் இம்மீன் உண்டாக்கும் மின்திறன், ஈல்மீனைப் போன்று அதிக அளவுடையதாய் இருப்பதில்லை.
Tags: