பிரஸருக்கு உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?

பிரஸரா? உணவில் உப்பைக் குறை. ஆம் பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்தி தான்.
பிரஸருக்கு உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?
உப்பு கூடாது என்பதற்கு காரணம் என்ன?

உப்பில் உள்ள சோடியம் (Sodium- Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறது. ஆனால் அதே நேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை (Potassium-K) அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பது பலருக்கும் தெரியாது.
இந்த விடயம் மருத்து உலகத்திற்கு நீண்ட காலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொது மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லை.

அண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texasஒரு ஆய்வு செய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. பிரஸர், பொட்டாசியம் ஆகிய வற்றுக்கு இடையான தொடர்பு பற்றிய இந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப் பட்டது. 

இது உணவுப் பொட்hசியத்தின் அளவிற்கு சமாந்திரமானது. உணவில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது.

பிரஸரை அதிகரிப்பவை
பிரஸரை அதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பிரஸருக்கும் பொட்டாசியத்திற்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்தது. 
அதாவது வயது, இனம், புகைத்தல், நீரிழிவு, கொலஸ்டரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்ட போதும் பொட்டாசியக் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பது தெரிந்தது. 

இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆப்பிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும் ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.
பொட்டாசியத்தின் முக்கியத்துவம்

பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமின்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயற் பாட்டிற்கும் அவசியமானது. பிரஸரைக் குறைப்பதற் கான உணவு முறையானது 

(Dietary Approaches to Stop Hypertension - DASH) உணவில் பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம் ஆகியன கூடியளவு இருக்க வேண்டும் எனச் சிபார்சு செய்கிறது. 

அதே நேரம் உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்பு) உப்பும் குறைவாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.அப்படி யாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரை களை மேலதிகமாக எடுக்க வேண்டுமா?

பொட்டசியம் அதிகமுள்ள உணவுகள் நிச்சயமாக இல்லை. ஆனால் பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பது நல்லது. இறைச்சி, மீன், பால், பாற் பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், தீட்டாத தானியங்கள் போன்ற வற்றில் அதிகம் உண்டு.
தக்காளி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், வாழைப்பழம், சோயா, இளநீர் போன்றவை சில உதாரணங்கள். பொதுவாக பல வகையான காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான அளவு பொட்டாசியம் சுலபமாகக் கிடைத்து விடும்.

ஒருவருக்கு தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப் படுகிறது. ஆயினும் கடுமையான உடற் பயிற்சிகள் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனை விட அதிகம் தேவைப்படும்.

பொட்டாசியம் குறைந்தால்
கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும், வியர்வையில் மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப் படுகிறது. இதனால் உடலில் பொட்டாசி யத்தின் அளவு குறை வடைந்து தசைப் பிடிப்பு (Muscle Cramps) ஏற்படலாம். 
சிலவேளை இருதயத் துடிப்பு ஒழுங்கீனமாகவும் கூடும். பொதுவாக கடுமையான உடற் பயிற்சியின் பின் ஒரு கப் ஆரன்ஜ் ஜீஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்கு உண்பதினால் இதனைத் தவிர்க்க முடியும்.

கடுமையான வயிறோட்டம், கட்டுபாட்டில் இல்லாத நீரிழிவு நோய், அதீத மதுப் பாவனை, குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு, போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்க் கூடும். 

சில மலம் இளக்கி மருந்துகளும், சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும் மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.
மீண்டும் பிரஸருக்கு வருவோம். பிரஸர் உள்ளவர்களே! உங்கள் உணவில் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை சற்று அதிகமாகவும், உப்பை சற்றுக் குறை வாகவும் உட்கொள் ளுங்கள். 

அது நன்மை பயக்கும். பிரஸர் வரக் கூடிய வாய்ப்பு உள்ளவ ர்களுக்கும் இது பொருந்தும்.
Tags: