இளைஞர்களுக்கு பர்கர் பற்றிய எச்சரிக்கை தகவல் !

இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ளவை பர்கர், பீட்சா. இதனால் ஆபத்து என்று தெரிந்தும் சாப்பிடுபவர்கள் ஏராளம்.

இளைஞர்களுக்கு பர்கர் பற்றிய எச்சரிக்கை தகவல் !
அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்டு, நிறைய கொழுப்பு, சர்க்கரை, உப்பு, சுவை யூக்கிகள், செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்ட உணவுகளே ஜங் ஃபுட். இந்த உணவுகளில் ஊட்டச் சத்துகளையும் நார்ச்சத்தையும் தேடினாலும் கிடைக்காது.

சீஸ் பர்கர் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும், ஆனால் இதனால் ஏற்படும் தீமைகள் உங்களுக்கு தெரியுமா? இரு பன்களுக்கு நடுவே நிறைய சீஸ், சிக்கன் அல்லது காய்கறிகள் கொண்டு செய்யப்பட்ட கட்லெட் துண்டு வைக்கப் படுகிறது.
அதிக கொழுப்பு, அதிக உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்டு களையும் கலவையாக கொண்டிருப்பதால் தான் சீஸ் பர்கர் அதிக சுவையுடன் இருக்கிறது. 

ஒரு சீஸ் பர்கரானது சாப்பிட்டவுடன் வேகப்பந்து போல சென்று மூளையைத் தாக்குகிறது. பர்கரில் உள்ள கொழுப்புச் சத்து நிறைந்த இறைச்சித் துண்டை கடித்தவுடன், மூளை டோபமைனை சுரக்கச் செய்கிறது. 

இது கோகைன் எனும் போதை மருந்து எடுத்துக் கொள்ளும் போது மூளையில் நடக்கும் செயலுக்கு சமமானது. பர்கரில் உள்ள வெள்ளை பன் அதிக சர்க்கரை கொண்டு தயாரிக்கப் படுவதால் மூளையில் செரடோனின் என்னும் திரவத்தை சுரக்கச் செய்கிறது. 

இது எக்ஸ்டசி என்னும் போதை மருந்தை உட்கொள்ளுவதால் ஏற்படும் உணர்வுக்குச் சமமானது. இதன் விளைவாகவே அதிகச் சுவையும் போதையும் உருவாக்கும் பர்கர் சாப்பிடுவதை யாராலும் எளிதில் விட முடிவதில்லை.

இளைஞர்களுக்கு பர்கர் பற்றிய எச்சரிக்கை தகவல் !
மேலும் பர்கரில் பயன்படுத்தப்படும் பன்னில், நீண்ட நாட்கள் கெடாமலிருக்கும் படி வேதியியல் பொருட்கள் கலக்கப்பட்ட கோதுமையே பயன்படுத்தப் படுகிறது.

இதனால் நீரிழிவு நோய், உடற்திறன் குறைபாடு, அதிக சோர்வு, வேலையில் கவனம் செலுத்த முடியாமை, ஹார்மோன் சுரப்பு சீரற்றுப் போவது மற்றும் பெண்களுக்கு கருப்பை கட்டிகள் வருவதற்கும் காரணமாகிறது.

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி, கால்சியம், கொழுப்பு ஆகியவையும் கூடுதலாகி, ரத்த நாளங்களில் தடை உருவாகி, மாரடைப்பு மற்றும் மூளைத் தாக்கு நோய் (Stroke) வருவதற்கும் காரணமாகி விடும்.
அல்சீமர் (Alzheimer’s disease) எனப்படும் மறதி நோய் வருவதற்கும் பர்கர் போன்ற கொழுப்பு உணவுகளே காரணமாகும். எனவே இயற்கையான முறையில் தயாராகும் உணவுகளுக்கு முதலிடம் கொடுத்து ஆரோக்கியமாய் வாழ்வோம்.
Tags: