சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள்! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள்!

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து பெரும் பான்மையான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது சிறுநீரகங்கள் ஆகும்.


உலக சிறுநீரக தினமான இன்று அதனை பாதுகாப்பது எப்படி, என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கால், முகம், கை மட்டுமில்லாமல் 

உள் உறுப்புகளான நுரையீரல், இதயம் போன்றவற்றை சுற்றியுள்ள சவ்வுகளிலும் தேங்கத் தொடங்கும்.

இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், நடக்க முடியாத நிலை, அமைதியின்மை போன்ற பிரச்சனைகள் வரும்.

சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?

1. உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

2. உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

3. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துங்கள்.

4. சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும்.

5. தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க வெளி உறுப்புகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

6. மது அருந்தாதீர்கள்.

7. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.

8. புகை பிடிக்காதீர்கள்.

9. தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

10. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.


சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முட்டைக்கோஸ்

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான சிறந்த உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது முட்டைக்கோஸ். 

அதிலுள்ள வளமையான ஊட்டச் சத்துக்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கிய த்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், பிற உறுப்புகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.

முட்டைக்கோஸில் வைட்டமின் கே, பி12, பி6, ஃபோலிக் அமிலம் மற்றும் டையட்டரி நார்ச்சத்து 

ஆகிய வைகளும் இருப்பதால் ஆரோக்கியமான சிறு நீரகங்களுக்கு இது ஒரு சக்தி வாய்ந்த உணவாக திகழ்கிறது.
காலிஃப்ளவர்

ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து காலிஃப்ளவரில் உள்ளது, 

அதில் உள்ள வைட்டமின் சி சத்து சிறுநீரக அமைப்பு ஆரோக்கியமான முறையில் செயல்பட உதவிடும்.


பூண்டு

பூண்டில் சோடியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான பொருட்கள் அடங்கியுள்ளது.

இது ஒரு சிறந்த அழற்சி நீக்கி உணவாகும். இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடலில் இரத்த ஓட்டம் சீராக்க நடந்திட உதவிடும்.
பீட்ரூட்

பீட்ரூட் உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தின் அளவுகளை பராமரிக்கும் திறனை பீட்ரூட் கொண்டுள்ளது.

பீட்ரூட்டில் வைட்டமின் பி6 மற்றும் கே அடங்கியுள்ளதால், சிறுநீரக செயல்பாடுகளுக்கு அது சிறந்த உணவாக விளங்குகிறது.

ப்ளூபெர்ரி

ஆந்தோசையனிடின்ஸ் எனப்படும் ஃபைடோகெமிக்கல்ஸ் ப்ளூபெர்ரிகளில் வளமையாக உள்ளது. 

ப்ளூபெர்ரியில் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் கனிமங்களின் அளவும் போதிய அளவில் உள்ளது.

இவை யிரண்டுமே ஒட்டு மொத்த ஆரோக்கியத் திற்கும் முக்கியமான கூறுகளாகும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் புரதம் அதிகமாக உள்ளது. மேலும் ஆரோக்கியமான சிறு நீரகங்களின் செயல் பாடுகளுக்கு தேவையான அதிமுக்கிய அமினோ அமிலங்களும் இதில் அடங்கியுள்ளது.

இது ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு தேவையான அசைவ உணவாகும்.


ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் ஒலீயிக் அமிலம் வளமையாக உள்ளது. 

சிறுநீரகங்களின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவிடும் முக்கிய கூறாக இது விளங்குகிறது.

ஆலிவ் எண்ணெயில் மோனோ-சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளதால் அது விஷத்தன்மையை தடுக்கும். 

மேலும் மற்ற எண்ணெய்களுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்து பவர்களுக்கு புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படுவதற் கான இடர்பாடுகள் குறைவாக இருக்கும்.

தண்ணீர்


எந்த ஒரு உறுப்புக்கும் சிறந்த கூறாக இருப்பது தண்ணீரே. சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு தினமும் குறைந்தது 3 லிட்டர் அளவிலாவது தண்ணீர் குடியுங்கள்.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close