கணக்குல 5... வராதது... 6-வது கணவரோடு... பெண்ணின் லீலைகள் !

0

சமூக வலைதளங்கள் மூலம் ஏற்பட்ட காதலில் மயங்கி தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பரிதவிக்கும் அவலம். உல்லாசத்துக்காக ஆண்களை ஏமாற்றி சுற்றித் திரியும் பெண்ணின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ....கணக்குல 5... வராதது... 6-வது கணவரோடு... பெண்ணின் லீலைகள் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் முரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் சிவகுமார் இவர் டிரைவர். இவருக்கும் மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி வட்டம் டீ குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகள் காளீஸ்வரி இவர்கள் இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்தனர். 


இந்த நிலையில் இருவரும் காதலித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.


இந்த நிலையில் காளீஸ்வரி திடீரென சிவக்குமார் வீட்டில் இருந்து காணாமல் சென்றுள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாத சிவக்குமார் உடனடியாக காளீஸ்வரி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். 

அப்போது தான் சிவகுமாருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் காளீஸ்வரியின் தாய் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். அதாவது, காளீஸ்வரிக்கு ஏற்கனவே நான்கு திருமணம் நடைபெற்ற நிலையில், சிவக்குமாரிடம், எனக்கு ஒருவரிடம் தான் திருமணம் நடைபெற்றது. 


அவர் இறந்து விட்டார். அதனால் ஒரு பெண் குழந்தையுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறேன் என ஏமாற்றி ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். சிவக்குமாரை காதல் வலையில் சிக்க வைத்து திருமணம் செய்துள்ளார். 

இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ஆனால் காளீஸ்வரி ஏற்கனவே நான்கு பேரை ஆசை வார்த்தைகளை கூறி திருமண மோசடி செய்து அதில் இரண்டு பேரை ஆள் வைத்து தீர்த்து கட்டிவிட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 


உல்லாசத்திற்காக ஒவ்வொரு ஆண்களையும் ஏமாற்றி சுற்றித் திரியும் பெண் என தெரிய வந்தது. அதன் அடிப்படையில் சிவக்குமாரும் ஐந்தாவது ஆளாக திருமணம் செய்து ஏமாற்றப்பட்டுள்ளார். 


இவை அனைத்தும் காளீஸ்வரியின் தாய் ஆதாரத்துடன் புகைப்படத்துடன் சிவக்குமாரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த சிவக்குமாரோ தன் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் காளீஸ்வரிக்கு ஃபோன் போட்டு ஏன் என்னை இப்படி ஏமாற்றி விட்டாய் 

என்னோடு வந்து விடு குழந்தைகள் பாவம் என அவ்வப்போது கண்ணீருடன் கதறிய நிலையிலும் சிறிது கூட மனம் இறங்காமல், காளீஸ்வரி 9 மாத குழந்தையை கலைத்து கொலை செய்துவிட்டு, தற்போது ஆறாவது திருமணம் மோசடியில் வேறு ஒருவருடன் பழகி ஊர் ஊராக சுற்றி உல்லாச லீலையில் சிட்டுக்குருவியாக பறந்து வருகிறார்.


இந்த நிலையில் சிவக்குமாரோ என்ன செய்வதென்றே தெரியாமல் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடி வருவதுடன், காளீஸ்வரிக்கு போன் செய்து கெஞ்சி மனவேதனை அடைந்து வருவதுடன், 


இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்று விடுவேன், கத்தியால் குத்தி நானும் தற்கொலை செய்து கொள்வேன் என வீடியோ வெளியீட்டும் மனமிரங்காமல் உல்லாச லீலையில் காளீஸ்வரி சுற்றி வருகிறார்.


அவ்வப்போது சிவக்குமார் காளீஸ்வரி இடம் போனில் பேசினாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் போலீசையும் பார்த்து எல்லாரையும் பார்ப்பேன் என தரக்குறைவாக உல்லாச மோகத்தில் பெண் பேசும் அதிர்ச்சியூட்டும் ஆடியோக்களுடன் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக சிவகமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தும், விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கணக்குல 5... வராதது... 6-வது கணவரோடு... பெண்ணின் லீலைகள் !
காளீஸ்வரியும் எல்லா போலீசுக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு உல்லாச லீலையில் ஊர் சுற்றி வருகிறார். 


இதனால் சிவக்குமார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவி தன்னை திருமணம் மோசடி செய்து ஏமாற்றி, இரண்டு குழந்தைகளை பெற்று என்னிடமே விட்டு விட்டு தன்னிடமிருந்த நகை பணத்தை அபகரித்துக் கொண்டு வேறு ஒரு உடன் உல்லாசத்திற்காக ஓடி ஊர் சுற்றி வருகிறார். 

ஜாக்கிரதையாக போ தாயி... அன்பா பாசமா இருந்துட்டு போவோம்... ஞானகுருக்கள் !

எனவே எனது குழந்தையை என்னால் வளர்க்க முடியாத சூழ்நிலையால் குழந்தைகள் காப்பகத்தில் என்னுடைய குழந்தையை சேர்த்து அரசு வளர்க்க வேண்டும், என்னுடைய பணம் நகை இவைகளைப் பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings