கேரளாவின் பிரபலமான ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக 25 கோடி ரூபாய் வென்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் அனூப், பணத்தின் முன் மகிழ்ச்சியை எதிர்பார்த்தபோது, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தொடர் தொந்தரவால் மன நிம்மதியை இழந்து தவித்து வருகிறார்.
ஓணம் பம்பர் லாட்டரி-இல் அனூப்பின் டிக்கெட் எண் KN-XXXXXXX மூலம் 25 கோடி ரூபாய் முதல் பரிசைப் பெற்றார். இந்த வெற்றி அவரது வாழ்க்கையை மாற்றும் என எதிர்பார்த்த அனூப், ஏற்கனவே பணம் வங்கிக் கணக்கில் வரவழைக்கப் படுவதற்கு முன்பேயே பெரும் அழுத்தத்தை சந்திக்கிறார்.
போனை பிரா, பேண்ட் பாக்கெட்டில் வைக்கலாமா?
"10 சதவீதம் ஏஜென்ட் கமிஷன், 30 சதவீதம் வரி கழித்தால், எனக்கு 15 கோடி 75 லட்சம் மட்டுமே கிடைக்கும். ஆனால், அந்தப் பணம் இன்னும் கணக்கில் வரவில்லை. அதற்கு முன்பேயே உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து உதவி கேட்கிறார்கள்.
கடன் தரும்போது திரும்பத் தர மாட்டார்கள், அது என்னை பயமுறுத்துகிறது," என்று அனூப் தனது தவிப்பைப் பகிர்ந்தார்.
லாட்டரி வென்றது என் வாழ்க்கையை சிறப்பாக்கும் என்று நினைத்தேன், ஆனால் இப்போது நிம்மதி இன்றி தவிக்கிறேன்," என்று அவர் குமுறுகிறார். இதனால், அனூப் தனது குடும்பத்துடன் தற்காலிகமாக மறைந்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்?
கேரளாவில் லாட்டரி வெற்றிகள் பொதுவாக மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும், இது போன்ற தொந்தரவுகள் அல்லாத வெற்றியாளர்கள் தனியாக வாழ விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனூப் தனது வாழ்க்கையை சீரமைக்க ஏதாவது உதவி கிடைக்க வேண்டும் என்று நம்புகிறார்.


Thanks for Your Comments