கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில் நேற்று (அக்டோபர் 27) பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மரணத்திற்கு பிறகு இயற்கை இரக்கம் காட்டப் போவதில்லை... படிங்க !
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த இந்த சந்திப்பில், கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த சிலரும் கலந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்த விஜய், அந்த நாளின் நினைவு எனது மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை மறக்க முடியாது. அதற்காக நானும் உங்களில் ஒருவனாக இருப்பேன், என கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு ஆவணங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் விளக்கம்ப்படி, விஜய்யை பார்த்தவுடன் அவர் உடனே எழுந்து வந்து, திடீரென காலில் விழுந்து அழுததாகவும் கூறினர்.
அவர் மேலும், உங்கள் குடும்பங்களுக்கு தேவைப்படும் எந்த உதவியிலும் நான் உங்களுடன் இருக்கிறேன். குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற செலவுகள் எதுவாயினும் உடனடியாக உதவி செய்வேன் என உறுதியளித்தார்.
செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு மூன்று நாட்களுக்குள் விஜய் வீடியோ அழைப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடியிருந்தார்.
நல்ல மனைவிக்கு அடையாளம் என்னன்னு தெரியுமா? உங்களுக்கு !
அதனைத் தொடர்ந்து, அவர் நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அதன்படி, திங்கள் கிழமையன்று (அக். 27) மாமல்லபுரம் தனியார் விடுதி அரங்கில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து குடும்பங்களை சந்தித்தார். பின்னர், அவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கரூருக்கு திரும்பினர்.


Thanks for Your Comments