மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது ஏன்? தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?

0

தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிய வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? என்பது தெரியுமா? ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன. 

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது ஏன்? தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த  கிருமி நாசினி. முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். 

அப்போது  அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள்  வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். 

மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

அப்போதெல்லாம் நம்  தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள்  நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.

மஞ்சள் ஒரு இயற்கை என்டிபயோட்டிக். நமது முன்னோர்கள் குளிப்பதில் தொடங்கி வாசலில் தெளிப்பது வரை மஞ்சளை பயன்படுத்தி யமைக்கு இதுவே காரணம்.

மஞ்சள் புற்று நோய்க்கு எதிரானது. குறிப்பாக மார்பக புற்று நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனால் தான் ஆரம்ப காலத்தில் மஞ்சளை தாலியாக கட்டும் வழக்கம் காணப்பட்டது. தாலியை தங்கத்தில் அணிந்தாலும் அதனை மஞ்சள் கயிற்றில் கட்ட வேண்டும் என்பதற்கும் இதுவே காரணம்.

இதனை புரிந்துக் கொள்ளாத பலரும் இன்று தங்க தாலிக்கொடிகளில் தாலியை அணிந்துக் கொண்டு தங்களின் அறியாமையை கௌரவமாக நினைக்கும் அவல நிலை காணப்படுகின்றது.

மேலும் மஞ்சள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்க உதவும்.மஞ்சள் இதய நோய் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

பேய் ஓட்டுவதாக கூறிய சாமியார் - கதறி அழுத பெண் !

இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக? 

வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும்  வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது. 

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை புரிந்து செயல்படுவோம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)