குடியரசு தினம் என்றால் என்ன? ஏன் கொண்டாடுறோம் !

0

நம் தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சி யாளர்களையும் நினைவுக்கூரும் நாள், குடியரசு தினம் ஆகும். 

குடியரசு தினம் என்றால் என்ன? ஏன் கொண்டாடுறோம் !
இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு வித்திட இயலும் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். 

அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, 

நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பூப்பெய்திய பெண் குழந்தைகள்சாப்பிட வேண்டிய உணவு ! 

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் பூரண சுயராஜ்யம் என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 

குடியரசு தினம் என்றால் என்ன? ஏன் கொண்டாடுறோம் !

அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான பிரகடனம் உருவாக்கப் பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. 

ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப் பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. 

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு செய்வது எப்படி?

நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப் பட்டதால், 

1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவு கூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

குடியரசு தினம் என்றால் என்ன? ஏன் கொண்டாடுறோம் !

குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்து கொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. 

மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுடைய அரசு என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். 

அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப் பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ் செய்வது எப்படி?

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.

குடியரசு தினம் என்றால் என்ன? ஏன் கொண்டாடுறோம் !

அது மட்டுமல்லாமல், ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.

அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத் தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும். 

சுவையான அரைக்கீரை கொத்துக்கறி மசாலா செய்வது எப்படி?

சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் நம்மிடையே இருந்து வந்தாலும், 

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நம் குடியரசு தினம் பறை சாற்றும் வகையில் உள்ளதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)