பிரதமர் மோடி வந்த காரின் பாதுகாப்பு அம்சம் தெரியுமா?

0

இப்போதெல்லாம் உலகின் தலைவர்கள் பலரும் தங்கள் பாதுகாப்பில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள். அதற்காகவே தங்கும் வீடுகள், உணவு, பயணம் அனைத்தும் பல கட்ட சோதனைகளுக்குப் பின்னே வழங்கப்படுகிறது. 

பிரதமர் மோடி வந்த காரின் பாதுகாப்பு அம்சம் தெரியுமா?
அந்த விதத்தில் மற்றொரு பாதுகாப்பு அம்சம் அவர்கள் பயன்படுத்தும் கார்கள். ரதமர் மோடி வந்திறங்கிய ரூ10 கோடி காரில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? என்னன்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!

நடந்து முடிந்த குடியரசு தின விழா அணிவகுப்பை காண்பதற்காக பிரதமர் மோடி வந்து இறங்கிய ரூபாய் 10 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார் பற்றி தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு விலை கொண்ட இந்த காரை அவர் பயன்படுத்து வதற்கான காரணம் என்ன இந்த காரில் உள்ள அம்சங்கள் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்திய ராணுவ படையின் அணிவகுப்பும் ஒவ்வொரு மாநிலங்களின் வளர்ச்சி குறித்த மாநிலத்தின் கலாச்சாரம் குறித்த வாகன அணிவகுப்பு நடைபெறும். 

இந்த அணி வகுப்பு இந்தியா முழுவதும் பிரபலமான அணிவகுப்பாக பார்க்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த அணி வகுப்பில் பங்கேற்கும் வாகனங்கள் குறித்த விபரங்கள் நம்மை கவரும் வகையில் இருக்கும்.

ஏர் கண்டிஷன் மூலம் கொரோனா பரவுமா? ஆய்வு என்ன சொல்கிறது?

அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமான வாகனங்கள் கலந்து கொண்டனர் முக்கியமாக தேஜஸ் உள்ளிட்ட போர் விமானங்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன. 

ஆனால் அதை யெல்லாம் விட மக்கள் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது பிரதமர் மோடி வந்து இறங்கிய வாகனம் தான். இந்த அணிவகுப்பை காண்பதற்காக பிரதமர் மோடி ரூபாய் 10 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரில் வந்து இறங்கினார்.

இது ரேஞ்சரோவர் நிறுவனத்தின் கார் என்றாலும் லண்டனில் இந்நிறுவனம் உலகில் உள்ள பிரபலமான தலைவர்களுக்கான கார்களை தயார் செய்வதற்காக ஒரு பிரத்தியேக யூனிட் ஒன்றை வைத்துள்ளது. 

ஸ்பெஷல் வெஹிகிள் ஆபரேஷன்ஸ் என அழைக்கப்படும் இந்த பிரிவில் தான் பிரதமர் மோடி பயன்படுத்தும் இந்த ரேஞ்ச் ரோவர் காரும் தயாரிக்கப்பட்டது.

பிரதமர் மோடி நீண்ட ஆண்டுகளாக இந்த காரை பயன்படுத்தி வருகிறார். அலுவல் ரீதியான பயணங்களுக்கும், ரேலிகளுக்கும், தேர்தல் பிரச்சாரங்களுக்கும் இந்த வாகனத்தில் தான் அவர் சென்று வருகிறார். 

பிரதமர் மோடி வந்த காரின் பாதுகாப்பு அம்சம் தெரியுமா?

இதில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. மற்ற காரை காட்டிலும் இந்த காரில் உள்ள அம்சங்கள் மிக வித்தியாச மானதாகவும் பிரதமரின் பாதுகாப்பு காரணங்களுக் காகவும் வடிவமைக்கப் பட்டதாக இருக்கிறது.

இந்த எஸ்யூவி காரில் உள்ள கண்ணாடிகள் எல்லாம் துப்பாக்கித் துளைக்காத கண்ணாடிகளாக வழங்கப் பட்டுள்ளன. இதனால் காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்கும். 

காருக்கு வெளியே இருந்து ஸ்னைப்பர் கொண்டு தாக்குதல் நடத்தினாலும் கார் கண்ணாடி உடையாமல் உள்ளே இருக்கும் பயணிகளை பாதுகாக்கும். 

வெறும் துப்பாக்கி மட்டுமல்லாமல் வெடிகுண்டுகள் வெடித்தாலும் இந்த கண்ணாடி உடையாத அளவுக்கு பாதுகாப்பான கண்ணாடியாக வழங்கப் பட்டுள்ளது.

இந்த காரில் இருக்கும் மிக முக்கியமான அம்சம் என்றால் அதில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் தான். இந்த கார் வழியாக கண்ணாடிக்குள்ளே இருக்கும் விஷயங்களை தெளிவாக பார்க்க முடியாது. 

பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல் !

காருக்குள் இருக்கும் பயணிகள் ஆவணங்களை படித்துக் கொண்டு சென்றாலும் இந்த ஆவணங்களில் என்ன எழுதி இருக்கிறது என காருக்கு வெளியே இருக்கும் நபரால் படிக்க முடியாது.

வி-ஆர் 10 என்கிற உச்சகட்ட பாதுகாப்பு அம்சத்துடன் இந்தக் காரை உருவாக்கி யிருக்கிறார்கள். இதனால், காரின் அருகே 2 மீட்டர் இடைவெளியில் 15 கிலோ அளவுள்ள வெடிகுண்டு வெடித்தாலும் சிறிய சேதாரம் கூட ஏற்படாது. 

மேலும், காரின் கண்ணாடிகள் தோட்டாக்கள் துளைக்காத வகையில் பாலிகார்பனேட் பூச்சால் பூசப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த காரின் டயர்கள் அனைத்தும் வழக்கமாக காருடன் வருபவை அல்ல. 

மோடிக்காகப் பிரத்யேகமாகத் தயார் செய்யப் பட்டவை. சாலையில் உடனடியாக 160 கி.மீ. வேகத்தை எட்டக் கூடிய வகையில் உருவாக்கப் பட்டவை.

இந்த காரின் டயரில் யாராவது துப்பாக்கியால் சுட்டு பஞ்சர் ஆக்கினாலும் டயரில் காற்றே இல்லாமல் தொடர்ந்து இந்த காரில் பயணிக்கும் வசதி இருக்கிறது. 

பஞ்சரான இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

பிரதமர் மோடி வந்த காரின் பாதுகாப்பு அம்சம் தெரியுமா?

கார் எதன் மீதாவது மோதினாலோ அல்லது தாக்குதல் ஏற்பட்டாலோ தானாகவே எரிபொருள் தொட்டி உறுதியாக மூடிக்கொள்ளும் வகையில் தயாரிக்கப் பட்டிருக்கிறது. 

ஏஎச்-64 அப்பாச்செ ஹெலிகாப்டர்கள் மட்டும் பயன்படுத்தும் இந்த அம்சம் போயிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 5.0 லிட்டர் வி 8 சூப்பர் சார்ஜர் பெட்ரோலின் பொருத்தப் பட்டுள்ளது. இது அதிகபட்சம் 374 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

பஸ்கள் நீண்ட நாட்கள் இயங்காமலிருந்தால் இன்ஜின்கள் பாதிக்கும் - எச்சரிக்கை ! 

இது 0 to 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 10.4 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் அதிக பட்சமாக 193 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என இதன் வேகம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings