ரூ5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்... விண்ணப்பிப்பது எப்படி?

0

லக்பதி திதி எனும் திட்டத்தின் மூலமாக நாட்டில் பல பெண்கள் பலன் பெற்று வருவதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். 

ரூ5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்... விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது அதன் இலக்கு ரூபாய் 2 கோடியில் இருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின் மூலம் எந்தெந்தப் பெண்கள் பயன் பெறுகிறார்கள் என்பதையும், அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதையும் தெரிந்து கொள்வோம்.

காலிஃப்ளவர் பட்டாணி குருமா செய்வது எப்படி?

லக்பதி திதி திட்டம் என்றால் என்ன ? 

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின் போது இத்திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப் படுகிறது.

இப்பயிற்சியில் பெண்களுக்கு பிளம்பிங், எல்இடி பல்புகள் தயாரித்தல், ஆளில்லா விமானங்களை இயக்குதல் மற்றும் பழுது பார்த்தல் போன்ற பல திறன்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இத்திட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் சுயஉதவி குழுக்கள் மூலம் செயல்படுத்தப் படுகிறது. நாட்டில் உள்ள பல பெண்கள் இத்திட்டத்தின் பலனைப்பெற்று வருவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்தார். 

தற்போது இத்திட்டத்தின் பயனாளிகளின் இலக்கு ரூபாய் 2 கோடியில் இருந்து ரூபாய் 3 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.

திட்டத்திற்கான தகுதி?

இத்திட்டத்திற்கு வயது வரம்பு இல்லை. சபா பாரதிய மகிளா இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம்.பெண்கள் தங்கள் மாநிலத்தின் 'சுய உதவி குழுக்களில்' சேர வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ரூ5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்... விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, நீங்கள் 'சுய உதவிக் குழு' வணிகத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். வணிகத் திட்டம் தயாரான பிறகு, சுய உதவிக்குழு இந்தத் திட்டத்தையும் விண்ணப்பத்தையும் அரசுக்கு அனுப்பும். 

அதன் பிறகு, இந்த விண்ணப்பத்தை அரசு பரிசீலனை செய்யும். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், இந்தத் திட்டத்தின் பலன்களை உங்கள் குழு பெறலாம்.

இந்த திட்டத்தின் கீழ், பல மாநிலங்களில் வட்டியில்லா 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப் படுகிறது. 

கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா செய்வது எப்படி?

ஆவணங்கள் என்ன?

ஆதார் அட்டை, பான் கார்டு,முகவரி ஆதாரம்,வருமான சான்றிதழ்,பதிவு மொபைல் எண்,வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மின்னஞ்சல் முகவரி மேற்கண்ட விபரங்கள் போதுமானது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)