எங்கப்பா என்னை திட்டினார்.. சுவாரசிய சம்பவம்.. சுப்மன் கில் பேட்டி !

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 

எங்கப்பா என்னை திட்டினார்.. சுவாரசிய சம்பவம்.. சுப்மன் கில் பேட்டி !
106 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. 

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சின் போது முக்கியமான நேரத்தில் இளம் வீரரான சுப்மன் கில் அடித்த சதம் இந்திய அணியின் பெரிய ரன் குவிப்பிற்கு உதவியோடு சேர்த்து வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்த வரை தொடர்ச்சியாக தடுமாற்றமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வந்தார். 

பிரியாணி இலையின் நன்மை தெரியுமா? உங்களுக்கு !

அதிலும் குறிப்பாக துவக்க வீரருக்கான இடத்திலிருந்து மூன்றாவது வீரராக தனது இடத்தை மாற்றிக் களமிறங்கியதில் இருந்து தொடர்ச்சியாகவே அவரது ஆட்டம் சற்று மோசமான நிலையிலேயே இருந்தது.

அதிலும் குறிப்பாக கடந்த 12 இன்னிங்ஸ்களாக அரைசதம் கூட அடிக்காத சுப்மன் கில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி உள்ளது ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 

எங்கப்பா என்னை திட்டினார்.. சுவாரசிய சம்பவம்.. சுப்மன் கில் பேட்டி !

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்து தான் அடித்த சதம் குறித்து பேசிய இந்திய வீரர் சுப்மன் கில் கூறுகையில் : .

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

இந்நிலையில்  விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்த  இரண்டாவது போட்டியில்  பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை தோற்கடித்து 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. 

விளக்கேற்றும் எண்ணெயிலும் கலப்படம் !

இந்த இரண்டாவது போட்டியில் கில் சதம் அடித்திருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சுப்மன் கில், குல்தீப் வீசிய ஓவரில் ஒரு கேட்ச் பிடித்தேன். 

அப்போது அந்த பந்து என் கையில் பட்டு இரத்தம் வந்தது.  எனக்கு வலி இருந்ததால் பேட்டிங் செய்வதற்காக வலி நிவாரண ஊசியை போட்டுக் கொண்டு வந்து பேட்டிங் செய்தேன். 

கடந்த சில போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை. இதனால் எனக்கு நெருக்கடி இருந்தது. இருப்பினும் நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. 

எங்கப்பா என்னை திட்டினார்.. சுவாரசிய சம்பவம்.. சுப்மன் கில் பேட்டி !

நான் நானாக இருந்து விளையாட வேண்டும் என்று களத்தில் நின்றேன். நான் 104 ரன்களில் ஆட்டமிழந்து திரும்பியதும் அப்பா எனக்கு போன் செய்து வெறும் 104 ரன்களுக்கு அவுட்டாகிவிட்டாய் என்று என்னைத் திட்டினார்.

உண்மை தான் அப்பா தவற விட்டு விட்டேன் என்று கூறினேன். அதன் பின்னரே எனது தந்தை சமாதானம் அடைந்தார் என்று சுப்மன் கில் தெரிவித்தார்.  

மரபணு உணவுப் பொருளை கண்டறிவது எப்படி?

இந்திய அணிக்காக விளையாடுவது எனக்குக் கிடைத்த பரிசு. நான் சரியாக விளையாடாமல் இருந்து விமர்சனங்கள் ஏதேனும் வந்தால் அதை நான் கண்டு கொள்ள மாட்டேன்  என்று தெரிவித்திருக்கிறார். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings