துரதிர்ஷ்டம் வரப்போகுது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... எச்சரிக்கை !

துரதிர்ஷ்டம் வரப்போகுது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... எச்சரிக்கை !

0

மனித வாழ்வு என்பது இரண்டு பெரிய பிரிவுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் இது தான் மனித வாழ்வை நகர்த்திச் செல்லுகிறது. 

துரதிர்ஷ்டம் வரப்போகுது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... எச்சரிக்கை !
தொடர்ந்து அதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை, தொடர்ந்து துரதிர்ஷ்டம் கொண்டவரும் இல்லை. ஆனால் வெகு சிலர் மட்டுமே தொடர்ந்து துரதிர்ஷ்டத்தையும், அதிர்ஷ்டத்தையுமே அனுபவிப்பதைக் காண முடிகிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதமானது. சிலர் சிறுவயதில் கஷ்டப்பட்டாலும், பிற்காலத்தில் நல்ல வாழ்க்கையை வாழ்வார்கள். 

இன்னும் சிலர் ஆரம்பத்தில் செல்வாக்குடன் இருந்தாலும், பின்னாடி கஷ்டப்படுவார்கள். இது, இயற்கையானது. இதற்கு அவர்களை தப்பு கூறமுடியாது. அவர்கள் செய்த நல்லது, கேட்டதை வைத்து தான் அவர்களின் வருங்காலம் தீர்மானிக்கப் படுகிறது. 

சில சமயங்களில் கிரக மாற்றமும் இதற்கு காரணமாக இருக்கலாம். கிரக நிலை நன்றாக இருந்தால், ஆண்டியும் அம்பானியாவார்.

அதே போல, நமது வாழ்க்கையில் கெட்ட விஷயங்கள் அல்லது ஏதோ கெட்ட விஷயம் நடக்க போகிறது என்றால், நம்மில் பலருக்கு அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரியும். 

உதாரணமாக, காகம் கத்தினால்… வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போகிறார்கள்… பூனை குறுக்கே சென்றால் போன காரியம் விளங்காது என பல மூட நம்பிக்கைகள் உள்ளன. இருப்பினும் ஜோதிடத்தில் வாழ்க்கை குறித்த சில முக்கிய விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. 

அதாவது, ஒருவர் வாழ்க்கையில் பிரச்சனைகளை அல்லது துரதிர்ஷ்டத்தை சந்திக்கப் போகிறார்கள் என்பதற்கு முன்கூட்டியே சில அறிகுறிகள் தென்படும் என கூறப்படுகிறது. அந்த அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

பூனை அழுவது :

துரதிர்ஷ்டம் வரப்போகுது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... எச்சரிக்கை !
உங்கள் வீட்டில் அல்லது வீட்டைச் சுற்றி பூனை அழும் சத்தம் கேட்டால் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், வேதங்களில் பூனையின் அழுகை அசுபமாக பார்க்கப்படுகிறது. 

பூனையின் அழுகை சத்தம் கேட்கும் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்காது என்பது ஐதீகம். இது வாழ்க்கையில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் அறிகுறியாகும். ஒரு பூனை திடீரென்று வழியைத் தடுத்தால் அது அசுபமாக கருதப்படுகிறது.

வீட்டில் உள்ள துளசி செடி கருகுவது : 

இந்து மதத்தில் துளசி புனிதமானதாக கருதப்படுகிறது. அதுமட்டும் அல்ல, துளசி லட்சுமி மற்றும் விஷ்ணுவின் வடிவமாக பார்க்கப் படுகிறது. 

துளசி செடியை வீட்டில் பசுமையாக வைப்பதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசி உங்களுக்கு நிலைத்திருக்கும். அப்படி புண்ணியமாக பார்க்கப்படும் துளசி செடி அடிக்கடி வாடினால் அது நல்லது அல்ல. 

துளசி வாடினால் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் அதிகரிக்கும். வீட்டில் கெட்ட விஷயங்கள் நடக்கலாம். துளசி செடி காய்ந்த உடனேயே புதிய செடியை நட்டால் நிலைமை மேம்படும்.

அடிக்கடி கண்ணாடி உடைவது : 

துரதிர்ஷ்டம் வரப்போகுது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... எச்சரிக்கை !

வீட்டில் கண்ணாடி உடைவது சகஜம் தான். ஆனால், அடிக்கடி இது நடந்தால் ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்கள் அல்லது பீங்கான் ஆகியவை மோசமான நிகழ்வுகளை குறிப்பவை. 

அடிக்கடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் ஏதோ நெருக்கடி வரப்போகிறது என்று அர்த்தம். அதே போல், கண்ணாடித் துண்டுகள் அல்லது உடைந்த பாத்திரங்களை வீட்டில் வைக்கக் கூடாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)