பூமியின் மையத்தில் உள்ள நாடு எது? அந்த இடத்தின் சூழல் என்ன?

0

பூமியின் மையத்தில் உள்ள நாடு எது? அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கிறது? இந்த கேள்விக்கான பதில்களை இப்போது இங்கே பார்க்கலாம்.

பூமியின் மையத்தில் உள்ள நாடு எது? அந்த இடத்தின் சூழல் என்ன?
நீங்கள் பூமத்திய ரேகைக்கு மேல் இருந்தால் பூமியின் மையம் உங்களுக்கு கீழே 6378.137 கிலோ மீட்டர் தொலைவிலும், துருவப் பகுதிகளில் இருந்தால் 6356.752 கிலோ மீட்டர் தொலைவிலும், பிற பகுதிகளில் இருந்தால் சுமார் 6371 கிலோ மீட்டர் தொலைவிலும் பூமியின் மையம் இருக்கும்.

அறிவியலின் படி, பூமியின் உச்ச மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. அதற்கு மிக அருகில் உள்ள நகரம் கானாவின் தகோராடி ஆகும். கானா ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாகும். 


ஆப்ரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. வானியலாளர்களின் கூற்றுப்படி, கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளது. 


அதனால் தான் இந்த இடத்தை பூமியின் அடையாளமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள இந்த கானா நாட்டின் வரலாறு மிகவும் மர்மமானது. நடுவில் இருப்பதால், இங்குள்ள வளிமண்டலம் முற்றிலும் வேறுபட்டது. 

குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன், வாழ்க்கை பாடமும் அவசியம் !

உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இங்கு அதிக வெப்பம் நிலவுகிறது. மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் சென்றால் தீயில் எரியும் அளவிற்கு வானிலை நிலவுவதாக தெரிகிறது.


ஒரு காலத்தில் கானா நாடு மிகவும் வளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


உலகம் முழுவதும் விநியோகிக்கக் கூடிய அளவுக்கு இங்கு தங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தங்கச் சுரங்கங்களைப் பிடிக்க போர்ச்சு கீசியர்களுக்கும் ஆங்கிலேயர் களுக்கும் இடையே பல போர்கள் நடந்ததாகவும் வரலாறு உண்டு.

பூமியின் மையத்தில் உள்ள நாடு எது? அந்த இடத்தின் சூழல் என்ன?

மேலும், கானா மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானது. அங்கு பலர் வண்ணமயமான ஆடைகளில் காணப்படுவார்கள். கானா, மனிதனால் உருவாக்கப்பட்ட வோல்டா ஏரியின் தாயகமாகும். 

வோல்டா ஏரி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும். கொள்ளளவு அடிப்படையில், இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரியாக சொல்லப்படுகிறது. 

ஹேண்ட் சானிடைசர் பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள்?

பல ஆண்டுகளுக்கு முன்னர், நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்த ஏரி முதன்மையாக உருவாக்கப்பட்டது. தற்போது, 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கானா, மேற்கு ஆப்ரிக்காவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings