அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அபராதங்கள் என்ன? UAE ID, Visa

0

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களுக்கும் அங்கு வசிப்பவர்களுக்கு எமிரேட்ஸ் ஐடி வழங்கப்படும். இந்த ஐடியின் செல்லுபடிக் காலம் முடிந்த 30 நாட்களுக்குள் புதுபிக்க வேண்டும். 

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அபராதங்கள் என்ன? UAE ID, Visa
அப்படி புதுப்பிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். அடையாளம் (Identity), குடியுரிமை, சுங்கம் (Customs) மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான தகவலை ஃபெடரல் வரி ஆணையம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது.

1. ஐடியை பதிவு செய்யவும் வெளியிடவும் தாமதிப்பதற்கு அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நாள் தாமத்துக்கும் 20 திராம் அபராதம் அதிகரிக்கும். 1000 திராம் எட்டும் வரை அபராதம் தொடரும்.

2. எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிக்க தாமதித்தாலும் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு நாள் தாமத்துக்கும் 20 திராம் அபராதம் அதிகரிக்கும். 1000 திராம் எட்டும் வரை அபராதம் தொடரும்.

ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க?... சீக்கிரம் அத மாத்திக்கோங்க... !

3. ஐடி பெறும் போது தவறான தகவல்கள் வழங்கினால் 3000 திராம் அபராதம்.

4. துல்லியமில்லாத தட்டச்சுக்கு 1000 திராம் அபராதம்.

5. அரசு ஊழியர்களுடன் ஒத்துழைக்க மறுத்தால் 5000 திராம் அபராதம்.

6. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிறுவனத்துக்கு விசா அளித்தாலும் 20,000 அபராதம்.

7. முறைகேடுகளில் ஈடுபட்டால் 50,000 அபராதம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings