சினிமாவாகும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கைக் கதை !

0

பிரபல அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். அவர் வாழ்க்கைக் கதை இப்போது சினிமாவாகிறது.

சினிமாவாகும் மைக்கேல் ஜாக்சnin வாழ்க்கைக் கதை !
அசரடிக்கும் நடனத் திறமையாலும் எழுச்சிப் பாடலாலும் பல கோடி ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டவர் மைக்கேல் ஜாக்சன். அவரது நடனம் மீது இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் தீராத பிரியம் இருக்கிறது.

அமெரிக்காவில் 1958 ம் ஆண்டு எளிய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் மைக்கேல் ஜாக்சன். சிறுவயது முதலே தனது தந்தையின் இசைக்குழுவில் இணைந்து பாடி, தனது திறமையை வளர்த்துக் கொண்டார். 

நீர்க்கட்டி பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் !

ஆனால், அவரது குழந்தைப் பருவம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. தனது உருவத்திற்காகவும் நிறத்திற்காகவும் கடுமையாக கேலிகளைச் சந்தித்தவர் மைக்கேல் ஜாக்சன்.

ஆனால், வளர்ந்த பிறகு இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது அசாத்திய நடனத் திறமையாலும் பாடல் வரிகளாலும் உலகில் பல ரசிகர்களைத் தன் வசப்படுத்தினார். 

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு லண்டன் நகரில் மாபெரும் கச்சேரி ஒன்றில் பங்கேற்று திரும்பிய அவர் ஜூன் 25, 2009 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

சினிமாவாகும் மைக்கேல் ஜாக்சnin வாழ்க்கைக் கதை !

இந்நிலையில் தான் மைக்கேல் ஜாக்சன் பயோ பிக் ஒன்று உருவாக உள்ளது. மைக்கேல்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில், மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெமைன் ஜாக்சனின் மகன் ஜாஃபர் ஜாக்சன், மைக்கேல் ஜாக்சனாக நடிக்கிறார். 

அன்டோயின் ஃபுகுவா இயக்கும் இந்தப் படத்தை ஆஸ்கர் விருது பெற்ற ‘பொஹிமியன் ராப்சோடி’ படத்தை தயாரித்த கிரஹாம் கிங் தயாரிக்கிறார்.

மாத்திரைகளை டீ காபியில் போட்டு விழுங்கினால் என்னாகும் தெரியுமா? 

அவர் கூறும்போது, 2 வருடங்களுக்கு முன்பு ஜாஃபரை சந்தித்தேன். மைக்கேல் ஜாக்சனின் ஆளுமையை இயல்பாக அவர் வெளிப்படுத்திய விதம் கண்டு வியந்தேன். 

மைக்கேல் ஜாக்சனாக நடிப்பதற்கான நடிகரை, உலகம் முழுவதும் தேடிய பிறகு, அதற்கான சரியான நபர் ஜாஃபர் மட்டுமே என்பது தெளிவானது என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings