புதுச்சேரியில் நொடியில் நொறுங்கிய புதிய வீடு !

0

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்டது ஆட்டுப்பட்டி பகுதி. இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்டோருக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளது. 

புதுச்சேரியில் நொடியில் நொறுங்கிய புதிய வீடு !
இதையடுத்து, இந்த பகுதியில் பலர் வீடு கட்டி குடியேறி வசித்து வருகின்றனர். இதில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும் அரசு பட்டா நிலம் வழங்கியுள்ளது. 

கணவரை இழந்த அவர் தனது மகள் சித்ரா மற்றும் கார் ஓட்டுநரான தனது மருமகன் சுரேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சாவித்திரி அரசு தனக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவில், 3 அடுக்குமாடிக் குடியிருப்பு காட்டி வருகின்றார். 

பெண்கள் டென்ஷன் இல்லாமல் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பணிகள் நிறைவடைந்து, வண்ணம் பூசப்பட்ட இந்த குடியிருப்பின் புதுமனை புகுவிழா வரும் பிப்ரவரி 1ம் தேதி நடத்த சாவித்திரி குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

இதனிடையே, சாவித்திரி வீட்டின் பின்பகுதியில் உப்பனாறு கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. கழிவுநீர் வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையாளர் ஈடுபட்டு வருகின்றனர். 

சாவித்திரி வீட்டின் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வந்த போது அவரது வீடு எதிர்பாராத விதமாக லேசாகச் சாய்ந்துள்ளது. 

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள், அந்த கட்டடத்தின் அருகே இருந்து விலகி ஓடினர். அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த 3 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு முழுவதுமே சரிந்து வாய்க்காலுக்குள் விழுந்தது.

நல்வாய்ப்பாக குடியிருப்பிலும், அதனருகில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் குடியிருப்பு சரிந்த இடத்தில் பார்வையிட்டார். 

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 3 அடுக்குமாடி கட்டும் போது அதன் அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், அஸ்திவாரம் சரியாகப் போடப்படாததாலேயே கட்டிடம் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தார். மேலும், வீட்டை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நொடியில் நொறுங்கிய புதிய வீடு !
பழைய சாதம் தான் ஊட்டச்சத்து மிக்க காலை உணவு !

தங்கள் வீடுகள் இடிந்ததைக் கண்ட சாவித்திரி மற்றும் அவரது மகள் சித்ரா ஆகியோர் தங்களின் இத்தனை ஆண்டு உழைப்பு மொத்தமும் நாசமாகி விட்டதாகக் கதறி அழுதனர். 

மேலும், பொதுப்பணித் துறையைக் கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். புதுச்சேரியின் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)