மாட்டு பொங்களன்று பனிப்புயல்.. நெப்போலியன் சொன்ன விஷயம் !

1

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் மற்றும் மாட்டுப் பொங்கல் குறித்து நடிகர் நெப்போலியன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

மாட்டு பொங்களன்று பனிப்புயல்.. நெப்போலியன் சொன்ன விஷயம் !
இந்த பதிவு கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நெப்போலியன் தற்போது தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார். 


அங்கு அவரது வீடு, பண்ணை மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்டவை கடந்த சில மாதங்களாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு விவாதிக்கப்படுகிறது. 

கர்ப்பிணிகளுக்கு தைராய்டு இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு தெரியுமா?

நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என்ற 2 மகன்களும் உள்ளனர். சமீபத்தில் தனது 60 ஆவது பிறந்த நாளை நெப்போலியன் விமர்சையாக கொண்டாடினார். 


இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் அமெரிக்காவில் வீசும் பனிப்புயல் காரணமாக நெப்போலியனால் மாட்டுப் பொங்கலை கொண்டாட முடியவில்லை. 


இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது..


அன்பு நண்பர்களே, அருமை தமிழ்ச் சொந்தங்களே..


வணக்கம்…


இன்றைக்கு மாட்டுப் பொங்கல்


நம்ம Farm ல நிறைய மாடுகள் இருக்கிறது…


ஆனால் நாங்க வீட்டை விட்டே வெளியில போக முடியாத சூழ்நிலை…

மாட்டு பொங்களன்று பனிப்புயல்.. நெப்போலியன் சொன்ன விஷயம் !

நேற்று அமெரிக்காவில பனிப்புயல் வந்து அடிச்சதனால நாடு முழுக்க பனி கொட்டித் தீர்த்துறிச்சி… -16 degrees செல்சியஸ்..! Feels Like -20 degrees..


கடுங் குளிர் வெளியே போக முடியாது..!


எல்லோரும் வீட்டுலேயே முடங்கிக் கிடக்கிறோம்…


இன்னும் 3 நாளக்கு வெளியில போகமுடியாது..


நீங்க எல்லாம் நம்ம நாட்டுல நல்லா கொண்டாடுங்க… என்று கூறியுள்ளார்.

இன்றைய நாகரிக உடைகள்.. ஜீன்ஸ் !

இதற்கு பதில் அளித்துள்ள இன்ஸ்டாகிராம் யூசர்கள் நீங்களும் வாங்க நம்ம எல்லாம் சேர்ந்து கொண்டாடுவோம், இந்த வருடம் இல்லை என்றால் என்ன அடுத்த ஆண்டு மாட்டுப் பொங்கல் செய்யலாம் கவலை வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment