படுத்திருந்த மனைவியை காணோம்... ஆனால் மாட்டு கொட்டகைக்குள்?

0

திருமணமான இந்த பெண்ணுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்களாம். இரவு நேரத்தில் தண்ணி அடிப்பாராம். அதுவும் மிட்நைட்டில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் போடுவாராம். இவரது பெயர் சரஸ்வதி.

படுத்திருந்த மனைவியை காணோம்... ஆனால் மாட்டு கொட்டகைக்குள்?
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது வடகரை என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் பழனிவேல். இவருக்கு 42 வயதாகிறது. இவரது மனைவி பெயர் சரஸ்வதி. 

இவர்களுக்கு கல்யாணமாகி 17 வருடங்கள் ஆகின்றன. 2 ஆண் குழந்தைகளும் இவர்களுக்கு உள்ளனர். பழனிவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவர். 

கடந்த 10 வருடங்களாகவே, வெளிநாட்டில்தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து, அந்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்து வருகிறார். ஆனால், கணவர் வெளிநாடு போனதிலிருந்தே, சரஸ்வதியின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டது.

உணவுக்குழாய் புற்று நோய்க்கான காரணம் என்ன?

நிறைய ஆண் நண்பர்களுடன் நெருங்கி பழகியதாக தெரிகிறது. பழனிவேல் அனுப்பி வைத்த பணத்தைக் கொண்டு, அந்த ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடித்தும், நெருக்கமாகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பழனிவேல் குவைத்தில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு தம்பதி 2 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் பழனிவேல் கண்விழித்து பார்த்த போது, பக்கத்தில் படுத்திருந்த சரஸ்வதியை காணவில்லையாம். 

படுக்கையில் மனைவி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்து, இரவு நேரத்தில் எங்கே சென்றிருப்பார்? என்று வீடு முழுவதும் தேடியிருக்கிறார். 

வீட்டில் எங்கும் இல்லாததால், வீட்டுக்கு பக்கத்திலிருந்த மாட்டுக் கொட்டகைக்குள் சத்தம் வருவதை கேட்டு, அங்கே சென்று பார்த்திருக்கிறார். அங்கே நடந்ததை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்று விட்டார்.

அந்த மாட்டுக் கொட்டகையில் சரஸ்வதி, தன்னுடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடித்து, நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இதை கண்ணால் பார்த்ததுமே பழனிவேல் ஆத்திரத்தில் கத்தி உள்ளார்.

இதனால், அங்கிருந்த ஆண் நண்பர்கள், உடனே எகிறி தப்பி விட்டார்கள்.. சரஸ்வதி மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். 

இதனால், சரஸ்வதி மீது கடும்கோபம் ஏற்படவும், அவரை வீட்டிற்கு இழுத்துச் சென்ற பழனிவேல் சரமாரி அடித்து தாக்கினார். இதில், சரஸ்வதி அங்கேயே சுருண்டு விழுந்தார். 

அது என்ன மறைமுக மன அழுத்தம்? அதை எப்படி கண்டுபிடிப்பது?
சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது, சரஸ்வதி இறந்து கிடந்தார். பிறகு, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். 

பழனிவேல் இப்போது ஜெயிலில் உள்ளார். தாய், தகப்பனின்றி அந்த 2 குழந்தைகளும் கதறி கொண்டிருக்கின்றன. கூடா நட்பு கேடாய் தானே முடியும்?

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)