உணவுக்குழாய் புற்று நோய்க்கான காரணம் என்ன?

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர்.
உணவுக்குழாயின் அடிப்பகுதியில் பிறவிச்சுருக்கம்

சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம்.

மேலும், உணவுக் குழாயின் அடிப்பகுதியில் பிறவிச் சுருக்கம், இரைப்பை ஏற்றம், ரத்தசோகை, ‘டைலோசிஸ்’ (Tylosis), ‘அக்கலேசியா கார்டியா’ (Achalasia cardia) போன்ற பரம்பரை நோய்களும், மரபணுக் கோளாறுகளும் இந்தப் புற்று நோய்க்குக் காரணமாகலாம். 
தவிர, விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊட்டச்சத்துக் குறைவு, வைட்டமின் சத்துக் குறைவு, பல் மற்றும் வாய் சுத்தமின்மை ஆகியவையும் இந்த நோய் உருவாவதைத் தூண்டுகின்றன. 

நெஞ்செரிச்சல் நோய் பல வருடங்களுக்குத் தொடருமானால் அது ‘பேரட்ஸ்’ (Barrett’s) உணவுக் குழாயாக மாறி, இந்தப் புற்று நோய்க்குப் பாதை அமைக்கும். சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. 
உணவுக்குழாய் புற்று நோய்

காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.

போதுமான உடற்பயிற்சியின்மை, சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவையும் புற்று நோய் வருவதற்கான காரணங்களாக அமையலாம். 
தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்து கொள்வது நல்லது. சுகவீனமான உடம்பு, நோய்கள் தங்கும் கூடாரமாகி விடும். 

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தான் நோய்களின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்.
Tags:
Privacy and cookie settings