பயில்வானை பந்தாடிய கீர்த்தி... வீட்டுக்கு வந்து பார்த்தியா !

பயில்வானை பந்தாடிய கீர்த்தி... வீட்டுக்கு வந்து பார்த்தியா !

0

சினிமா பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து கேள்விப் பட்டதை எல்லாம் வீடியோவாக பேசி அதை யூடியூப் சேனலில் போட்டு பணம் சம்பாதிக்கும் பயில்வான் ரங்கநாதனை, நடிகை கீர்த்தி பாண்டியன் விளாசி எடுத்துள்ளார்.

பயில்வானை பந்தாடிய கீர்த்தி... வீட்டுக்கு வந்து பார்த்தியா !
சமீபத்தில் தான் நடிகர் அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற்றது. அதற்குள் இருவருக்கும் இடையே வீட்டிலும் வெளியேவும் சண்டை என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். 

அசோக் செல்வன் அழகாக இருக்கிறார் என்றும் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை போய் ஏன் திருமணம் செய்துக் கொண்டார் என ஏகப்பட்ட பாடிஷேம் ட்ரோல் மற்றும் நிறவெறி கமெண்ட்டுகள் குவிந்தன. 

மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !

அதை யெல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த வாரம் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணகி மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள சபா நாயகன் உள்ளிட்ட படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. 

இந்நிலையில், சமீபத்தில் கண்ணகி படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கீர்த்தி பாண்டியனிடம் பயில்வான் ரங்கநாதன் வழக்கம் போல விவகாரமாக பேசிய நிலையில், வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பயில்வான் ரங்கநாதன், வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா பட ரிலீஸிலும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க என கேட்டுள்ளார். 

உடனடியாக கொந்தளித்த கீர்த்தி பாண்டியன், என் வீட்டுக்கு வந்து நீ பார்த்தியா என்றும் எங்கள் இருவருக்குள் சண்டை எப்போது வந்தது என்றும் கேள்வி எழுப்பி பயில்வான் ரங்கநாதனை பந்தாடினார்.

டயாபட்டீஸ் நோய் பற்றிய ஓர் அலசல் !

இப்படி தொடர்ந்து அடி வாங்கினால் பயில்வான் ரங்கநாதன் போன்ற நபர்கள் இப்படி பேசவே மாட்டார்கள் என கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் ரசிகர்கள் அடித்து வருகின்றனர். 

அதே சமயம் பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயத்தை வேறு விதமாக டீல் செய்வார் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)