பெண்ணுரிமை பேசிய ஜுனைதா பேகம்.. நாவல் எழுதிய முதல் பெண் !

இஸ்லாத்தில் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் கிடையாது. ஆண் மகனுக்கு ஆகும் என்றால் பெண் மகளுக்கும் ஆகும் என 70 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை பேசிய தமிழின் முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம். 

பெண்ணுரிமை பேசிய ஜுனைதா பேகம்.. நாவல் எழுதிய முதல் பெண் !

மார்ச் 19, அவரது நினைவுநாள். சித்தி ஜுனைதா 1917-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அப்பகுதியில் பிரபலம். 

தந்தை கல்வியாளராக இருந்தாலும், அந்நாளில் கல்வி கற்பதில் இஸ்லாமிய பெண்களுக்கு இருந்த கடும் கட்டுப் பாடுகளினால் சித்தி ஜூனைதா பேகம் 3-ம் வகுப்பு வரை மட்டுமே பயில முடிந்தது. 

மரபணு வரைபடங்கள் அறிந்து கொள்ள?

இருப்பினும் இயற்கையான எழுத்தின் மீதான ஆர்வமும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், அவரை 16 வயதில் எழுத்துத் துறைக்கு கொண்டுவந்தது.

பெண்கள் தனித்துவமாக இயங்கும் சூழல் அதிகரித்த இந்நாளிலும் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து இலக்கியப் பணியாற்றுபவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. 

இந்த நிலையில் சுதந்திரத்திற்கு முந்தைய, பிற்போக்குத் தனம் நிரம்பி வழிந்த அக்காலத்தில் ஒரு தமிழ் இஸ்லாமிய  பெண் துணிச்சலாக எழுத்துலகிற்கு நுழைந்தது ஆச்சரியமானது.

மற்ற எந்த சமூகத்தினரை விடவும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தில்,  சித்தி ஜுனைதா வெறும் எழுத்தாளர் என்ற மட்டத்தில் நின்று விடவில்லை. 

பெண்ணியத்தையும் ஆண், பெண் சமத்துவத்தையும் தன் எழுத்துக்களிலும் நடைமுறை வாழ்விலும் தீவிரமாக வெளிப்படுத்தினார்.  தனது 21 வது வயதில் ஒரு காதல் கலந்த புரட்சி நாவலை எழுதி இருக்கிறார்.

சரி... அந்த கால கட்டத்தில் இலக்கிய உலகில் பெண்கள் நிலை எப்படி இருந்தது..? 

அதை சித்தி ஜூனைதா பேகமே சொல்கிறார்....

நான் புத்தகம் எழுதிய காலத்தில் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது, எந்தப் பெண்களிலும் நல்ல எழுத்தாளர்கள் அதிகம் இல்லை.. எழுத்தாளர் மட்டுமென்ன ? ஒரு முஸ்லிம் பெண்கள் பள்ளிக் கூடமும் இல்லை.

மாம்பழத்தால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது !

இந்து - முஸ்லிம்கள் பெரிதும் ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே ஒரு முஸ்லிம் சிறுமியை நாகூரில் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு பெண் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.

இப்படிப்பட்ட காலத்தில் எழுத்துல கத்துக்கு வந்த சித்தி ஜூனைதா பேகம், ஒரு இளம் விதவை. பன்னிரண்டு வயதில் கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டு, நான்கு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்து, பதினாறு வயதில் விதவை ஆனவராம்.

எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப் படுத்தி வைத்தி ருக்கிறதோ , அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலை நிமிர்ந்து நிற்க முடியாது. இப்படி தனது 21 வது வயதில், தான் எழுதிய காதலா கடமையா.. நாவலில் சொல்லி இருக்கிறார் சித்தி ஜூனைதா பேகம்.

இந்த காதலா கடமையா நாவலில், சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் எல்லா இலக்கியங்களின் கருத்தும் வருகிறதாம். ஆனால்... இந்த சித்தி ஜூனைதா பேகம் படிக்க அனுமதிக்கப் பட்டது வெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே.

சித்தி ஜூனைதா பேகம் எழுதிய காதலா கடமையா நாவல் வெளிவந்த சில காலம் பின். அந்தக் கதையை அடிப்படை யாக கொண்டு, ஒரு திரைப் படமும் தயாரிக்கப் பட்டு, அது மிகப் பெரிய வெற்றியை அடைந்ததாம்.

அதுதான்... எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன். ஆனால், அதற்கான பெயர் ஏனோ சித்தி ஜூனைதா பேகத்துக்கு கிடைக்க வில்லை.. ஆனால் அதற்காக சித்தி ஜூனைதா பேகம் மனம் கலங்கவில்லை.

குடும்ப அட்டை, மின் இணைப்பு பெற ஆதரவு இயக்கம்
( எம்.ஜி.ஆர். கவனத்துக்கு, சித்தி ஜூனைதா பேகம் பற்றிய செய்தி, கொண்டு போகப் படாமல் இருந்தி ருக்கலாம்..)

சித்தி ஜூனைதா பேகம் நமக்கு சொன்ன செய்தி இது தான் :

பிறர் நலத்திற்காக வாழுங்கள்.

உங்கள் நலத்திற்காக மட்டும் வாழாதீர்கள்.

இந்த எளியேனின் புத்திமதி இதுதான்..."

Tags:
Privacy and cookie settings