இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரி செய்வது எப்படி?

0

தூக்கம் அசத்தும் போது, படுக்கையை விட்டு எழுந்து கொண்டே இருப்பது நிச்சயம் எரிச்சலான விஷயம் தான். 

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரி செய்வது எப்படி?
உங்களது தூக்கத்தின் நடுவே பல முறை சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருந்தால், உங்களுக்கு நாக்டூரியா என்று அழைக்கப்படும் பிரச்சனை இருக்கலாம். 

இது அதிகம் பேருக்கு இருக்கும் தொந்தரவு தான், வயதாக ஆக இது அதிகரிக்கும். உண்மையில் இது பரவலான ஒரு பிரச்னை. இதன் பெயர் adult nocturia, வயதானோர்க்கு வரும். நாக்டூரியாவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

சிறுநீர்ப்பை என்பது 300மில்லி முதல் 600 மில்லி வரை கொள்திறன் கொண்ட ஓர் உடலுறுப்பு. இதன் கொள்திறன் இரண்டு காரணங்களால் குறையலாம்.

உடற்கூறியல் மாற்றம். ஆண்களில், இது பொதுவாக புரோஸ்டேட் ஹைபர்ப்ளாசியா (Benign prostatic hyperplasia) என்ற காரணத்தால் ஏற்படுகிறது. 

பெண்களில், இது உடல் பருமன் மற்றும் இடுப்பு உறுப்பு சரிவினால் (pelvic organ prolapse) ஏற்படுகிறது. பாலியூரியா: ஆண்டி டியூரிடிக் ஹார்மோனின் (antidiuretic hormone) செயல்பாட்டின் காரணமாக இரவு சிறுநீர் உற்பத்தி பொதுவாக குறைகிறது. 

ஆனால் நாம் வயதாகும் போது, இரவில் இந்த ஹார்மோனின் வெளியீடு குறைகிறது. இது இந்தப் பிரச்னைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று.

இருப்பினும் பல்வேறு நோய்கள் இதைத் தூண்டலாம். உதாரணமாக, நீரிழிவு நோய், சிரைப் பற்றாக்குறை, இதயச் செயலிழப்பு, தமனி உயர் ரத்த அழுத்தம் போன்றவை.

சுகப்பிரசவம் நடைபெற என்ன செய்ய வேண்டும்?

மேலும், மாலையில் அதிகமாக திரவ உணவுகளை உட்கொள்ளல் மற்றும் காபி, மது, புகையிலை போன்றவற்றின் பயன்பாடும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

கூடுதலாக, மருந்துகளின் பக்க விளைவுகள் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கலாம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டை மாற்றலாம்.  

இந்த தொந்தரவுக்கும் உங்கள் ஜீரணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. உங்களுக்கு மலம் கழிக்கும் சிக்கல்கள் இருப்பின், இந்த தொந்தரவும் கூடவே இருப்பதில் ஆச்சரியம் இல்லை. 

ஏனெனில், குடலில் அடைத்து இருக்கும் மலக்கழிவுகள் சிறுநீர் அறையைத் தொடர்ச்சியாக அழுத்துவது சிறுநீர் கழிக்கும் நிர்பந்தத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது. 

ஆகையால், மல சிக்கல்களைத் தீர்ப்பது இந்த தொந்தரவையும் குறைக்கும்.

இந்த பாதிப்பை ஏற்படுத்தும் பொதுவான மருந்துகள் :

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரி செய்வது எப்படி?

டையூரிடிக்ஸ் (Diuretics): 

நீர் கோர்த்தல் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. 

ஆன்டிகோலினெர்ஜிக்ஸ் (Anticholinergics): 

இவை பெரும்பாலும் சிறுநீர்ப்பையின் அதீத செயல்பாட்டு நோய்க்குறியைக் குணமாக்கப் பயன்படுத்தப் படுகின்றன. 

இவை இந்த உறுப்பைக் கட்டுப்படுத்தும் நரம்பு சமிக்ஞைகளில் தலையிடலாம் மற்றும் நாக்டூரியா போல சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கலாம்.

உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள்: 

கால்சியம் சேனல் தடுப்பான்கள், ஆஞ்சியோடென்சின் (angiotensin) மற்றும் என்சைம் தடுப்பான்கள் போன்றவை.

புருவ முடிகளைத் திருத்தும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல் !

மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள் (antidepressants): 

ஆண்டி டியூரிடிக் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறுபயன்பாட்டு தடுப்பான்கள் போன்றவை.

லித்தியம்: 

பைபோலார் கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இந்த மருந்துகளை உட்கொள்ளும் எல்லோருக்கும் நாக்டூரியா பக்க விளைவாக வராது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

யாராவது தங்களுக்கு இந்த விளைவு இருப்பதாக சந்தேகித்தாலோ அல்லது சொல்லப்பட்ட அறிகுறியைப் பற்றி கவலைப் பட்டாலோ, அவர்கள் தங்கள் மருத்துவரை அணுகுவது முக்கியம். 

இந்த மருந்துகளுக்கு அவர்கள் மாற்று மருந்துகளை வழங்கலாம் அல்லது சிகிச்சையை சரி செய்யலாம்.

இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்னையைத் தடுக்க 5 வழிகள் :

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரி செய்வது எப்படி?

மருந்துகளை உட்கொள்ளும் எல்லோருக்கும் நாக்டூரியா பக்க விளைவாக வராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாக்டூரியா மேலாண்மை தனிப்பட்ட நபர்களைப் பொறுத்து மாறுபடும், ஏனெனில் இதற்குப் பல காரணிகள் உள்ளன.

வாழ்க்கை முறை மாற்றங்கள்: 

படுக்கைக்குச் செல்வதற்கு 4 முதல் 6 மணி நேரத்திற்கு முன் திரவ உணவுகள் உட்கொள்வதைக் குறைக்கவும். இரவில் மது மற்றும் காபியைத் தவிர்க்கவும். புகைபிடிப்பதை விட்டு விடவும். 

அதிக எடை இருந்தால் எடையைக் குறைக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறுநீர் கழிப்பது நல்லது. 

மேலும் உங்கள் கால்களில் நீர் கோர்க்கும் சிக்கல் இருந்தால், இரவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அவற்றை உயர்த்தி வைத்திருப்பது நல்லது.

நீரிழிவு அல்லது இதய நோய் போன்ற மருத்துவ காரணிகளால் நாக்டூரியா ஏற்பட்டால், அவற்றுக்கு முறையாக சிகிச்சை பெறுவதன் மூலம் அறிகுறிகளைக் குறைக்கலாம். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் இருப்பது முக்கியம்.

குழந்தையில்லா குறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்?

மருந்தியல் சிகிச்சைகளை மாற்றுவது: 

டையூரிடிக்ஸ், ஆஞ்சியோ டென்சின் மாற்றும் என்சைம் தடுப்பான்களின் அட்டவணையை மாற்றவும். பக்க விளைவுகளைக் குறைக்க சிகிச்சையை எப்படி சரி செய்யலாம் என்று மருத்துவர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.

இடுப்பின் அடிப்பகுதியிலுள்ள தசைகளுக்கான சிகிச்சை (Pelvic floor treatment) மற்றும் பிசியோ தெரபிஸ்டுகளுடன் சிறுநீர்ப்பை பயிற்சி சிறுநீரைக் கட்டுப் படுத்துவதில் உதவியாக இருக்கும்.

சில நேரங்களில், ஒரு தனிப்பட்ட மதிப்பீட்டிற்குப் பிறகு, மருத்துவர் இரவுநேர பாலியூரியா சிகிச்சைக்கான மருந்துகளை பரிந்துரைக்கலாம். 

சுருக்கமாக, வயதானவர்களுக்கு நாக்டூரியா மிகவும் பொதுவானது என்றாலும், அது தூக்கத்தையும் அதன் விளைவாக வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது.

முடிவு :

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்னையை சரி செய்வது எப்படி?

நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது தான் இதன் தீர்வாகும். நார்ச்சத்துகள் ஜீரணக் குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் அரும் உதவி புரிகின்றன. 

மல சிக்கல்கள் குறைந்த பின்னர், சிறுநீர் பை அழுத்தம் தானாகவே சீராகும், சிறுநீர் கழிக்கும் உந்துதலும் குறையும். நார்ச்சத்து நிரம்பியுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது ஜீரணத்திற்கு மட்டும் உதவக் கூடிய விஷயமல்ல.  

அவை இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், உடலின் இன்சுலின் செயல்பாட்டை உறுதிபடுத்தும். 

கட்டாயம் பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் !

மேலும், பகலில் உடலுக்குத் தேவையான நீர் அருந்துவது, சமகால அளவுகளில் சிறுநீர் கழிப்பது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உந்துதலைக் குறைக்கின்றன.

அதிக நாச்சத்து நிரம்பியுள்ள உணவுகள் – ஒட்ஸ், கினோவா, கொட்டைகள், பார்லி, பருப்புகள், பீன்ஸ், ஆப்பிள்கள், வாழைப்பழங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)