உங்கள் அலுவலகத்தில் பாஸை கவர்வது எப்படி? தெரியுமா?

0

உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் முடித்து விடுங்கள். நீங்கள் சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பது தான் உங்களுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கிறது.

உங்கள் அலுவலகத்தில் பாஸை கவர்வது எப்படி? தெரியுமா?
அது உங்களுக்கு வேலையின் மீதுள்ள அர்ப்பணிப்பை காட்டுகிறது. நீங்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளதால், வேலைகளை எப்போதும் பென்டிங் இல்லாமல் முடித்து விடுவதில் சரியாக இருங்கள்.

ப்ரொஃபஷனலிசம்

எப்போதும் ஒரு ப்ரொஃபஷனல் போல் நடந்து கொள்ளுங்கள். அலுவலகத்துக்கு சரியான நேரத்தில் வருவது, நன்றாக உடை அணிந்து கொள்வது 

மற்றும் உரையாடல் சரியாகவும், தரமாகவும் இருப்பதை உறுதி செய்வது என உங்களின நடத்தை மிக நன்றாக இருக்க வேண்டும். 

உங்களின் இது போன்ற செயல்களே நீங்கள் அலுவலகத்துக்கு எந்த மாதிரியான ஊழியர் என்பதை காட்டும். எனவே ப்ரொஃபஷனலாக நடந்து கொள்ளுங்கள்.

டை அடிப்பதற்கும் ஹேர் கலரிங்செய்வதற்கும் உள்ள வித்தியாசம்?

இனிஷியேட்டிவ் எடுங்கள்

நீங்கள் எப்போதும் செயலூக்கமுள்ள ஊழியர் என்பதை நிரூபிப்பதற்காக எப்போது தன்னார்வத்துடன் ப்ராஜெக்ட்களில் பங்கெடுங்கள். 

முன்னேறுவதற்கான அறிவுரைகளை கூறுங்கள். இது நிறுவனத்தில் வெற்றியில் உங்களுக்கு உள்ள அர்ப்பணிப்பை காட்டுகிறது.

ஒவ்வொன்றையும் கவனியுங்கள்

உங்கள் அலுவலகத்தில் பாஸை கவர்வது எப்படி? தெரியுமா?

உங்கள் வேலையை உன்னிப்பாக கவனித்து எந்த குறையும் இன்றி செய்து முடியுங்கள். ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை களையுங்கள். 

எப்போதும் உயர் தரமான வேலையை செய்யுங்கள். இதை நிச்சயம் உங்கள் பாஸ் கவனிப்பார். கட்டாயம் பாராட்டவும் செய்வார். எனவே உங்கள் வேலையை தரமாக செய்யுங்கள்.

தரமான உரையாடல்

நீங்கள் ஒருவருடன் உரையாடும் போது சுருக்கமாகவும், தெளிவாகவும் பேச வேண்டும். எழுத்துப் பூர்வமாக தொடர்பு கொள்ளும் போதும் அதிக கவனம் தேவை. தேவைப்படும் போது கேள்வி கேளுங்கள். 

உங்களின் பணி குறித்த தற்போதை நிலவரங்கள் என்ன என்பதையும் தெரியப் படுத்துங்கள். உங்கள் உரையாடல் துல்லியமாக இருக்க வேண்டும். அப்போது தான் எந்த இடைவெளியும் இன்றி வேலைகள் சரியாக நடைபெறும்.

ஏழு விஷயம் பொய்யின்னா உங்க வாழ்க்கை கஷ்டம் தான் !

நேர்மறை சிந்தனை

அலுவலகத்தில் எப்போது நேர்மறை சிந்தனையுடன் பேசுங்கள். எப்போதும் பிரச்னைகளை தீர்வுகளை நோக்கி நகர்த்தும் நபராக இருங்கள். நல்ல சுமூகமான பணிச்சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

நல்ல சூழலில் பணி புரியும் போது தான் உங்களால் நன்றாக வேலை செய்ய முடியும். எனவே அந்த சூழவை உருவாக்கும் ஊழியருக்கு நிச்சயம் மதிப்பு இருக்கும்.

சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள்

உங்கள் அலுவலகத்தில் பாஸை கவர்வது எப்படி? தெரியுமா?

மாற்றங்களை திறந்த மனதுடன் எதிர் கொள்ளும் நபராக இருங்கள். வேலையில் நெகிழ்தன்மை கொண்டவராக இருங்கள். 

உங்களால் புதிய சவால்களை ஏற்று செயல்பட முடியும் என்று காட்டுங்கள். அனைத்து ஊழியரிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள்.

காதலனிடம் பெண்கள் கேட்க விரும்பும் 10 கேள்விகள் !

வளர்ச்சி

உங்களை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள். பயிற்சி மற்றும் திறன், வளர்ச்சி என அனைத்து குறித்தும் வாய்ப்புகளை தேடுங்கள். உங்கள் குழுவிடம் கற்றதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். வேலையுடன் சேர்த்து உங்களையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)