ஏர்செல் ஓனரின் மறுபக்கம்.. ஒரே வாரிசு துறவியாக மாறிய கதை !

0

உலக பணக்காரர்களில் முதன்மையான ஒருவரின் மகன் 40,000 கோடி சொத்துகளை வேண்டாம் என்று விலகி துறவியாகி யுள்ளார். அவரை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏர்செல் ஓனரின் மறுபக்கம்.. ஒரே வாரிசு துறவியாக மாறிய கதை !
உலகின் மாபெரும் பணக்காரர்கள், உலகளவில் நிறுவனங்களை நடத்தி வரும் ஜாம்பவான்கள், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசுகளில் ஒரு சிலர் எதுவுமே தேவை இல்லை 

நான் எளிமையான வாழ்க்கை வாழ விரும்புகிறேன் அல்லது துறவியாகிறேன் என்று முடிவெடுப்பதை கதைகளில் படித்து இருப்போம் அல்லது திரைப்படங்களில் பார்த்திருப்போம்.

அப்படி உண்மையிலேயே டெலிகாம் ஜாம்பவானாக திகழ்பவரின் மகன் ஒருவர் துறவியாக இருக்கிறார். 

டாய்லெட் பேப்பர் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதானாம் !

உலகத்தில் முதல் பணக்காரர் ஆகும் வாய்ப்பு கிடைத்தும், 40,000 கோடிக்கும் ஒரே வாரிசாக ஒரே உரிமையாளராக இருந்தும் எதுவுமே தேவையில்லை என்று 

துறவி வாழ்க்கையைத் தேர்வு செய்துள்ளார் ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த கிருஷ்ணாவின் ஒரே மகன் வென் ஆஜன் சிரிபான்யோ.

டெலிகாம் உலகில், 'ஏ.கே.' என்று பிரபலமாக அறியப்படும் ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 40,000 கோடி ரூபாய். 

இவர் czar என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார், அது மட்டுமில்லாமல் இந்தியாவின் முன்னணி டெலிகாம் கம்பெனியாக இருந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரும் இவர் தான்.

ஏர்செல் என்று சொல்லும் பொழுது பலருக்கும் பல நினைவுகள் தோன்றும். அதில் ஒன்று தான் எம். எஸ். தோனி தலைமையில் ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு ஆனந்த கிருஷ்ணனின் ஏர்செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்ததும். 

டெலிகாம் உலகிலேயே அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த இவரது ஒரே மகன் சிரிபானியோ சொகுசான, ஆடம்பரமான வாழ்க்கை தேவை இல்லை என்று ஒரு புத்த பிட்சுவாக மாறி துறவறத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

தமிழை தாயகமாகக் கொண்டு பிறந்த சிரிபான்யோ, ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தை முன்னெடுத்து செல்வார் என்று எண்ணப்பட்டது எழுதப்படாத விதி. 

டெலிகாம் மட்டுமல்லாமல் மீடியா, எண்ணெய், கேஸ், ரியல் எஸ்டேட் மற்றும் சாட்டிலைட் உள்ளிட்ட நிறுவனங்களும் இவர்களுக்கு சொந்தமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

கிட்டத்தட்ட ஒன்பது பெரு நிறுவனங்களில் கிருஷ்ணன் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனங்களில் இருந்து ஈட்டிய லாபம் இவரை மலேசியாவின் மிகவும் பணக்கார நபர்களில் ஒருவராக மாற்றி யிருக்கிறது.

தாய்மொழி தமிழாக இருந்தாலும் ஆனந்த கிருஷ்ணனும் புத்த மதத்தைச் சேர்ந்தவர் தான். கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன் கல்வி முதல் பலவிதமான சேவைகளுக்கு வாரி வழங்குவதில் வள்ளல் என்று கூறப்படுகிறார். 
பெண்களின் உயிரை வாங்கிய அந்த கால கருத்தடை சிகிச்சை !

இவருக்கு அடுத்து இவரது மகன் சிரிபான்யோ இவரது சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்துவார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் 18 வயதிலேயே சிரிப்பான்யோ புத்த மதத்தின் துறவியாக மாறினார்.

எது இவரை துறவரம் மேற்கொள்ள வைத்தது என்பது பற்றிய தகவல் துல்லியமான தெரியவில்லை என்றாலும், 

வேடிக்கையாக சிறிது காலத்திற்கு துறவரம் மேற்கொண்டு பார்க்கலாமே என்று தான் சிரிப்பான்யோ துறவறத்தை பூண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சிறிது காலத்துக்கு வேடிக்கை, ஓய்வு, ரீட்ரீட் என்று துறவறம் மேற்கொண்டது, இவருக்கு நிரந்தரமான அடையாளமாக. மாறி விட்டது. 

பல கோடி மதிப்புக்கு சொந்தமான நிறுவனங்களை நடத்துவதற்கு பதிலாக சிரிபான்யோ மிகவும் எளிமையான தினமும் யாசித்து எடுத்து வாழும் வாழ்க்கையை தேர்வு செய்தார்.

ஏர்செல் ஓனரின் மறுபக்கம்.. ஒரே வாரிசு துறவியாக மாறிய கதை !

இவர் துறவற வாழ்க்கையை தேர்வு செய்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இவர் வனத்தில் துறவியாக வாழ்வதை விரும்பி தேர்ந்தெடுத்து உள்ளார். 

அது மட்டுமில்லாமல் தாய்லாந்தில் இருக்கும் தட்டோ தம் மொனாஸ்ட்ரயில் தலைமை துறவி ஆனார். இவருடைய தாய் வழி உறவு படி தாய்லாந்தின் அரச குடும்பத்தின் வாரிசும் இவர்தான் என்று கூறப்படுகிறது. 

காச நோய் மலட்டுத் தன்மையை உண்டாக்குமா? எப்படி தடுப்பது?

துறவரம் மேற்கொள்வதற்கு முன்பு இவர் என்ன செய்தார் என்பதை பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்க வில்லை. 

இருப்பினும் சிரிபான்யோ இங்கிலாந்தில் இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தார் என்றும், இவருக்கு எட்டு மொழிகள் சரளமாக தெரியும் என்றும் கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings