எகானமி டிக்கெட் எடுத்து பிசினஸ் கிளாஸ் பெறுவது எப்படி?

0

பயணம் செய்வது எப்போதுமே அலாதியான அனுபவத்தை தரக்கூடியது. அதே சமயத்தில் இந்தப் பயணம் நமக்கு சோர்வையும், பணச் செலவையும் தரும் என்பதையும் மறுக்க முடியாது.

எகானமி டிக்கெட் எடுத்து பிசினஸ் கிளாஸ் பெறுவது எப்படி?
ரயில் அல்லது பேருந்து பயணங்களை விட விமானப் பயணங்கள் சொகுசு நிறைந்ததாக இருக்கும் என்ற பார்வை நம்மிடம் இருக்கிறது. 

உடனிருக்கும் பயணிகள் சத்தமாக பேசுவது, வசதியில்லாத இருக்கைகள் என அங்கும் பயணிகளுக்கு பல்வேறு அசௌகர்யங்கள் ஏற்படுவது பலருக்கும் தெரிவதில்லை. இது போன்ற அசௌகர்யங்கள் பெரும்பாலும் எகனாமி வகுப்பில் தான் நடைபெறும். 

மரணத்தை காட்டும் எபிடியூரல் பிரசவ மயக்க மருந்து !

விமானத்தின் எகனாமி வகுப்பில் டிக்கெட் எடுத்து விட்டு எப்படி பிசினஸ் வகுப்பில் பயணம் செய்யலாம் என்ற சூட்சுமத்தை சமீபத்தில் அடீல் பார்பரா என்ற பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். 

இவர் கூறுவது போல் செய்தால் குறைவான கட்டணத்தில் வசதியாக பயணம் செய்யலாம் போல் தோன்றுகிறது.

2019-ம் ஆண்டு மெல்போர்ன் நகரத்திலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு என் கணவர் மற்றும் இரு குழந்தைகளோடு விமானத்தில் பயணமானேன். 

நாங்கள் எகனாமி வகுப்பு டிக்கெட் தான் வாங்கியிருந்தோம். நீண்ட தூரம் இதில் அமர்ந்து எப்படி பயணம் செயப்போகிறோம் என்ற கவலை எனக்கிருந்தது. 

ஆனால் சில சூட்சுமங்களை பயன்படுத்தி, ரூ.10,000 செலவில் என் குழந்தைகள் வசதியாக ஓடியாடி விளையாடுவதற்கும் நிம்மதியாக தூங்குவதற்கும் சூப்பரான இருக்கையை ஏற்பாடு செய்தேன் என பார்பரா கூறுகிறார்.

அது என்ன சூட்சுமம்? நமக்கு தெரிந்தால் அதை பயன்படுத்தி பார்க்கலாமே என்று கேட்கிறீர்களா?. அது என்னவென்றால், விமான டிக்கெட்டுகளில் இருக்கும் ஸ்கைகவுச் (Skycouch) ஆப்ஷன். 

இதில் பிசினஸ் வகுப்பை விட குறைவான விலைக்கு நமது டிக்கெட்டை அப்கிரேடு செய்து கொள்ள முடியும். அதன்படி வரிசையாக உள்ள மூன்று இருக்கைகள் நமக்கு ஒரே படுக்கையாக தரப்படும். 

கர்ப்பிணிகளுக்கு தைராய்டு இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு தெரியுமா?

இதை பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து விலை மாறுபடும். இரண்டு நபர்கள் பயணம் செய்தால், மூன்றாவது இருக்கையை பாதி விலை கொடுத்து நாம் எடுத்துக் கொள்ளலாம். 

இதன் மூலம் நமக்கு மூன்று இருக்கைகளும் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதற்கு இடமும் கிடைக்கிறது என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பார்பரா. 

எகானமி டிக்கெட் எடுத்து பிசினஸ் கிளாஸ் பெறுவது எப்படி?

ஆனால் இந்த வசதிகள் நீண்ட தூர விமானங்களில் மட்டுமே இருக்கும். இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நமக்கான வசதிகளை அதிகப் படுத்திக் கொள்ள முடியும். 

குழந்தைகளோடு விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும். தனியாக பயணிப்பவர்கள், தம்பதிகள், சிறு குடும்பங்கள் ஆகியோர்களுக்கும் இந்த ஸ்கைகவுச் ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும். 

தீக்காயத்திற்கான எளிமையான வீட்டு வைத்தியங்கள் !

இதில் கிடைக்கும் மிகப்பெரிய சௌகர்யம் என்னவென்றால், உங்கள் அருகில் தெரியாத நபர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் தாராளமாக காலை நீட்டி நிம்மதியாக படுத்து உறங்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings