கழுதைப்புலியை கட்டிப்பிடித்த நபர்.. அடுத்து நடந்தது என்ன?

0

பல்வேறு கண்டங்களை கொண்டு மிகப்பெரிய அண்டமாக இருக்கும் இந்த உலகில் பல ஜீவராசிகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வுலகம் எவ்வளவு பெரியது என்றாலும் நமது கைகளில் உள்ள சிறிய கைப்பேசி அதை நம் கைக்குள் சுருக்கி விட்டது. 

கழுதைப்புலியை கட்டிப்பிடித்த நபர்.. அடுத்து நடந்தது என்ன?
இது தவிர, நாம் அனைவரும் உபயோகிக்கும் சமூக வலைதளங்கள் அனைத்தும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. 

இந்த சமூக வலை தளங்களின் வாயிலாக பல சமயங்களில் அதிர்ச்சிகரமான விஷயங்களையும் ஆச்சரியமூட்டும் தகவல்களையும் நம்மால் அறிந்து காெள்ள முடிகிறது. 

உணவு மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க !

அப்படி அனைவரையும் ஆச்சரியப் படுத்தும் வகையிலான வீடியோ ஒன்று தான் தற்போது வைரலாகி வருகிறது. 

காட்டில் வாழும் வேட்டை விலங்குகளை பார்த்தால் நமது உள்ளூர நடுங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ஒரு சிலர் அப்படி மனிதர்களையே விழுங்கி விடும் காட்டு விலங்குகளுக்கே ஆட்டம் காட்டுகின்றனர். 

அவற்றிற்கு டிரைனிங் கொடுத்து தான் சொல்லும் பேச்சை கேட்க வைக்கின்றனர். அப்படி, ஒரு கொடூர விலங்கான கழுதைப் புலியை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு அமர்ந்து கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மனதைக் கவரும் விலங்கு - மனித தொடர்புகள் நிறைந்த உலகில், சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளுடன் பலர் கட்டிப் பிடித்தப்படி உறங்குவதை பார்த்திருப்போம். 

ஆனால், சங்கிலியால் கட்டப்பட்ட ஹைனாவை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோ அதை பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது 2 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்களை பெற்றுள்ளது. 

இந்த காட்டு விலங்குகள் முற்றிலும் வேட்டையாடுபவர்கள் என்ற பொதுவான நம்பிக்கையை மீறி, ஒரு மனிதன் பயமின்றி அரவணைத்து, ஹைனாவை நோக்கி அன்பை வெளிப்படுத்துவதை வீடியோ கிளிப் படம் பிறருக்கு காண்பிக்கிறது. 

மயக்கம் (fainting) மயக்க உணர்வு (dizziness) போக்க எளிய வழி !
இது போன்ற ஒரு அசாதாரண தொடர்பைப் பார்த்தது நெட்டிசன்கள் திகைத்து போயுள்ளனர். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல வகையான கருத்துகளை கூறி வருகின்றனர். 

ஒரு சிலர் அந்த மனிதரின் தைரியத்தை பாராட்ட ஒரு சிலர் தங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவே தங்களுக்கு பயமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings