எல்லாவற்றிலும் நான் தான் கிங்.. மொத்தம் 12 படம் !

0

இசையமைப்பாளர் அனிருத் அடுத்த ஆண்டு வெளியாகும் ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகார்த்திகேயன் என டாப் நடிகர்களின் பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

எல்லாவற்றிலும் நான் தான் கிங்.. மொத்தம் 12 படம் !
அனிருத் ரவிச்சந்தர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே தரமான மற்றும் ஆட்டம் போடும் மெட்டுக்களை போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

3 படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் 2023 வரை அனிருத்தின் வளர்ச்சி அபாரமானது என்று தான் சொல்ல வேண்டும். 

படிகாரத்தூள் இருந்தா எல்லா நோய்களுக்கும் நிவாரணம் பெறலாம் தெரியுமா?

முதலில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அதிகமாக இசையமைத்து வந்த அனிருத். பின்னர் இவரின் திறமை விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ், ரஜினி, அஜித் என்று முக்கிய நடிகர்களின் படங்கள் வரை அழைத்துச் சென்றது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் அனிருத்தின் இசை பெரிதும் பாராட்டை பெற்றது. 
அந்த படத்தின் இமாலய வசூலுக்கு அனிருத்தின் இசை முக்கிய பங்காக இருந்தது. குறிப்பாக டைகர்கா குக்கும் பாடல் ரஜினி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

அது மட்டுமில்லாமல் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் மாஸ் காட்டிய அனிருத்தின் கைவசம், 12 படங்கள் வெளியாக வுள்ளதாக கூறப்படுகிறது. 


2024ம் ஆண்டு வெளியாக உள்ள சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திலும், தலைவர் 171வது படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.


அதே போல உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படத்திலும், விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் 23வது படம், பிரதீப் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC படத்திலும், கவின் நடிக்கும் படத்திலும், 
தெலுங்கில் ஜூனியர் NTRருடன் தேவரா, விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்திலும், அல்லு அர்ஜுனின் அடுத்த படம் மற்றும் ஆகாஷ் அதர்வாவின் படம் என வரிசையாக படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)