துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை... போலீஸ் விசாரணை !

0

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை... போலீஸ் விசாரணை !
திமுக பொதுச்செயலாளரும், தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள துரைமுருகன் அரசியல் களத்தில் அனைத்து கட்சியின ரிடத்திலும் அன்போடு பழகக் கூடியவர். 

இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். துரைமுருகன் காட்பாடியில் வசித்து வரும் நிலையில், இவருடைய அண்ணன் துரை மகாலிங்கம் கடந்த ஆண்டு மரணமடைந்தார். 

நகம், முடி வெட்டும் போது வலிப்பது இல்லை.. ஏன் ?
இவரது மகள் பாரதி காட்பாடியில் கணவர் ராஜ்குமார், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். ராஜ்குமார் அப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதாக சொல்லப் படுகிறது. 

இதனிடையே காட்பாடி அருகேயுள்ள லத்தேரி தண்டவாளத்தில் நேற்று முன்தினம் உடல் துண்டான நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்காக உடலை அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 


இதனிடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டது அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி என்பது தெரிய வந்தது. 


இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பாரதி தற்கொலை செய்துக் கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திமுக தொண்டர்கள், பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டு தான் இருக்கும். அவைகளை தற்காலிக மாக்குவதும், நிரந்தர மாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. 


தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். 


அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். 

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள்!

மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).... !

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)