கேவ் எக்ஸ்ப்ளோர் பண்ண போன புட்பால் டீம்... நடந்த கதை !

0

தாய்லாந்தில் நடந்த கதை. ஒரு ஜூனியர் புட்பால் டீம் தன்னோட பயிர்ச்சி முடிஞ்ச பிறகு அங்க உள்ள ஒரு குகைக்கு போயிருக்காங்க. கேவ் எக்ஸ்ப்ளோர் பண்ணுவதற்காக. இதை அவங்க வழக்கமாக பண்ணுவது தான். 

கேவ் எக்ஸ்ப்ளோர் பண்ண போன புட்பால் டீம்... நடந்த கதை !
12 பேர் இருக்காங்க எல்லோருமே 12 முதல் 16 வயசு உள்ள சின்ன பசங்க தான். அவங்க 25 வயதுடைய கோச்சுடன் போயிருக்காங்க. 

அன்னைக்கு வழக்கத்துக்கு மாறாக மழை பெய்து வெள்ளம் அவர்கள் சென்ற குகையுடைய பாதையையே மூடிடுச்சு. கொஞ்ச நேரத்தில் இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிய வருது. அவங்களை காப்பாற்ற முயற்சிகள் நடக்குது.

மட்டன் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் எதுவுமே தெளிவா கண்டுப்பிடிக்க முடியலை. ஏன்னா, தண்ணீர் ரொம்ப அதிகமாகவும் குகை ரொம்ப குறுகலாகவும் இருந்ததால் அதற்குள்ளே போயி வருவது ரொம்ப சிரமமான விஷயமா யிருந்தது.


எல்லோரும் என்ன நினைச்சாங்கன்னா, குழந்தைகள்லாம் அங்கே சிக்கி ஒரு வாரம் ஆகிடுச்சு. இனியும் அந்த குகைக்குள்ள சாப்பாடு, தண்ணீர் இல்லாமல், மூச்சி விட முடியாமல் இருக்க முடியாது. 


உயிரோட இருக்க சாத்திய மில்லைன்னு நினைச்சாங்க. குறைந்தது அவங்களோட உடலையாவது மீட்டெடுக் கணும்ங்குற மனநிலைக்கு வந்துட்டாங்க.

அப்போ தான் எல்லோருக்கும் பெரிய ஆச்சர்யம் காத்துக்கிட்டிருந்தது. குகை வாயிலில் இருந்து நாலு கிலோமீட்டர் தள்ளி அந்த பசங்க எல்லோரும் உயிரோடு இருப்பதை கண்டுபிடிக்கிறாங்க.


இவங்களை காப்பாற்றவே கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகுதுன்னா பாருங்க. அந்த பசங்களை மயக்க நிலைக்கு கொண்டு வந்து தான் காப்பாத்தியாகணும். ஏன்னா வர வழியிலே பயந்துட்டா பிரச்சனையாயிடும். 


அவ்வளவு போராடி காப்பாத்துறாங்க. துரதிஷ்டவசமாக ஒரு டைவர் அவர்களை காப்பாற்ற சென்ற இடத்தில் இறந்துடுறார்.


இதில் ஆச்சர்யம் என்னன்னா, எப்படி அவங்க தாக்குப் பிடிச்சாங்க. எப்படி அவ்வளவு நாள், அவ்வளவு இருட்டுல அந்த சின்ன பசங்களால தைரியமா, நம்பிக்கையோடும் இருக்க முடிஞ்சது.

சிக்கன் சூப் ரைஸ் செய்வது எப்படி?
சின்ன குழந்தைகளாலேயே இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இவ்வளவு நம்பிக்கையோடு நம்ம காப்பாத்திடு வாங்கன்னு மன தைரியத்தோடு இருக்க முடியும்னா நம்மளால வாழ்க்கையில சாதிக்க முடியும்ங்குற அளவுக்கு கூடவா நம்பிக்கை இல்லாமல் போயிடும்.

வாழ்க்கை எவ்வளவு மோசமாக ஆனாலும் நம்ம தைரியமா யிருக்கணும். ஏன்னா, எப்ப அது மாறும், யார்க்கிட்டேருந்து உதவி வரும், எப்போ மிராக்கில்ஸ் நடக்கும்னு யாருக்குமே தெரியாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings